Tap to Read ➤

சிறு சிறு நோய்களை வீட்டிலேயே குணமாக்க எளிய டிப்ஸ்!

வீட்டிலுள்ள பொருட்களால் சிறு சிறு நோய்களை குணமாக்கலாம்.
HTML Tamil
சிறு சிறு நோய்களுக்கு, மருத்துவமனைக்குச் செல்லாமல், எளிய முறையில் வீட்டில் வைத்தியம் செய்தால், உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
தினமும் வெந்நீரிலோ அல்லது பாலிலோ தேன் காலந்து குடித்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். இருமல், சளி குணமாகும்.
தினமும் காலையில் 10 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை படிப்படியாக குறைந்து, நல்ல மாற்றத்தை காணலாம்
இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுவோர் சிறிதளவு வெந்நீரை அருந்திய பின் படுக்கைக்குச் சென்றால் நல்ல தூக்கம் வரும்.
பல் வலிக்கு, துளசி இலை, உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தினால், வலி குறையும்.
அருகம்புல் சாற்றை வாரம் ஒருமுறை குடித்து வந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்படுவதோடு, உடல் உஷ்ணமும் தணியும்.
உடல் வெளுப்பு மற்றும் தேம்பல் குணமாக, பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து, தினமும் தோலில் தேய்த்து குளித்து வரலாம்.
கடுமையான இருமலுக்கு, 3 கப் தண்ணீருடன், வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் குணமாகும்.
வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்துவதற்கு, கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்று தின்றால் சரியாகும்.
சளி தொல்லைக்கு, குப்பை மேனியின் சாற்றை சிறிதளவு மட்டும் கொடுத்தால், சளி வாந்தியாக வெளியே வந்து விடும்
ஆண்மைக்குறையை போக்க, முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து இரவில் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.