Tap to Read ➤

கால் ஆணி பாதிப்பில் இருந்து குணமாக எளிய டிப்ஸ்!

பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களே கால் ஆணியால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.
HTML Tamil
உடலிலின் அதிகப்படியான வெப்பம், அலர்ஜி, கிருமித் தொற்று போன்ற காரணங்களால் கால் ஆணி ஏற்படுகிறது.
பாதத்தின் தோல் பகுதி கடினமாகுவது,  பாதத்தில் சிறு கொப்பளங்கள் வருவது போன்றவை கால் ஆணிக்கான அறிகுறிகளாகும்.
மிக இருக்கமான காலணிகள் அணிவது, சாக்ஸ் அணியாமல் ஷூ போட்டுக் கொள்வது போன்றவற்றால் பாதத்தில் அழுத்தம் அதிகரிக்கிறது.
காலில் அழுத்தம் இருப்பதுபோல் தோன்றியதும் உடனே கவனிக்காவிட்டால், தரையில் பாதத்தை ஊன்ற முடியாத அளவிற்கு வலியை ஏற்படுத்தும்.
கால் ஆணி பிரச்சனைக்கு, வீட்டிலேயே எளிய முறையில் சிகிச்சை செய்து குணமாக்குவது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.
மருதாணி இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து, காலில் ஆணி இருக்கும் இடத்தில் வைத்து துணியில் கட்ட வேண்டும். மறுநாள் மிதமான உப்பு நீரில் காலை சுத்தம் செய்யவேண்டும்.
வறுத்த கடுகுப் பொடி மற்றும் மஞ்சள் பொடியை, விளக்கெண்ணெயுடன் சேர்த்து தைலப் பதத்தில் காய்ச்சவும். இரவில் கால்களை சுத்தப்படுத்தி, இதனை தடவினால் கால் ஆணி குணமாகும்.
மருதாணியுடன், மஞ்சள் மற்றும் வசம்பை சேர்த்து அரைத்து, கால் ஆணி இருக்கும் இடத்தில் வைத்து, அதன் மேல் வெற்றிலையை வைத்து துணியால் கட்டலாம்.
அம்மான் பச்சரிசி என்னும் மூலிகைச் செடியை எடுத்து, அதிலிருந்து வரும் பாலை கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் குணமாகும்.
சில பூண்டு பல்லுடன் மஞ்சள் சேர்த்து சாறு வரு வரை நசுக்கி, கால் ஆணி மீது வைக்கலாம்.
இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து, காலில் உள்ள ஆணி மீது தடவி வந்தால், கால் ஆணி குணமாகும்.
சில பூண்டு பல்லை இடித்து, அப்படியே சாற்றோடு காலில் ஆணி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கால் ஆணி சரியாகும்.