Varalakshmi N       May 13, 2026

 பார்லர் போகாமல் முகம் பிரகாசிக்க உதவும் எளிய டிப்ஸ்..!

AI - IMAGE

மாசு, வெயில் மற்றும் வாழ்க்கை முறைகளால் சருமம் பொலிவிழந்து     காணப்படுவது சாதாரணம். இயற்கை பொருட்களை பயன்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் மாற்றலாம்.

சருமத்திற்கு நீண்டநாள் ஆரோக்கியமான பொலிவாக இருக்க இயற்கை முறைகள் மிக சிறந்தது. சரும பொலிவிற்கு உதவும் சில டிப்ஸ் இங்கே பார்க்கலாம்

தினமும் போதுமான தண்ணீர் குடிப்பது சரும ஆரோக்கியத்திற்கு அவசியம். பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவு இயற்கை குளோவை அதிகரிக்கும்

சூரிய ஒளியில் செல்லும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது முக்கியம்

மஞ்சள் மற்றும் தயிர் பேக் முகத்திற்கு இயற்கை குளோ தரும்

கடலை மாவு மற்றும் பால் சேர்த்து பயன்படுத்தினால் முகம் பொலிவாகும்

வெள்ளரிக்காய் சாறு முகத்திற்கு புத்துணர்ச்சி தரும்

உருளைக்கிழங்கு சாறு கரும்புள்ளிகளை குறைக்க உதவும்

இயற்கை வீட்டுச் சிகிச்சைகள் உடனடி மாற்றத்தை விட மெதுவாகவும் ஆரோக்கியமாகவும் சருமத்தை பராமரித்து, முகத்திற்கு இயற்கையான அழகையும்     நம்பிக்கையையும் அளிக்கின்றன.