Tap to Read ➤

கண் பார்வைத் திறனை மேம்படுத்த எளிய டிப்ஸ்!

சில எளிய வழிமுறைகள் மூலம் கண்பார்வை திறனை அதிகரிக்கலாம்.
HTML Tamil
கண் பார்வை குறைபாடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி வருகிறது. இதனால் சிறுவர்களும் கண்ணாடியை பயன்படுத்தும் சூழல் ஏற்படுகிறது.
கம்ப்யூட்டர், செல்ஃபோன், டிவியை தொடர்ந்து பார்ப்பது, சத்துக்கள் இல்லாத உணவுகள், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு போன்றவையும் கண்சார்ந்த பிரச்சனைகளை உண்டாக்கிறது.
கண்களில் வறட்சி, எரிச்சல், கண்ணீர் வருவது, லேசாக கண் மங்குதல் போன்றவை, கண் பார்வை குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
கண் பார்வை குறைபாடுகளை சில எளிய வழிமுறைகள் மூலம் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
கீரைகள், கேரட், பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, வெள்ளரி, மீன், முட்டை, பாதம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் பார்வை திறன் அதிகரிக்கும்.
தலையை அசைக்காமல், கண் விழிகளை மட்டும் வலது, இடது, மேல், கீழ் என அசைத்து தினமும் கண் பயிற்சி செய்ய வேண்டும்.
தினமும் அதிகாலையில் சூரியனை, கண் விழிகளை சுழற்றியபடி சிறிது நேரம் பார்க்கலாம். மாலையில் சூரியன் மறைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக பார்க்கவேண்டும்.
தினமும் உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி, அதில் கண்களை சிமிட்டலாம். இதனால் கண்களில் உள்ள தூசு, அழுக்கு நீங்கும்.
தினமும் 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். சீரான உறக்கம் இருந்தால் கண்களில் எரிச்சல் போன்ற பிரச்சனை ஏற்படாது.
அடிக்கடி கண்களைச் சிமிட்ட வேண்டும். இதனால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பார்வைத்திறனும் பாதுகாக்கப்படும்.
தினமும் 2 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும். இதனால் உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கலாம்.
மொபைல், கம்ப்யூட்டர், டிவி போன்றவற்றை அளவுடன் பார்க்க வேண்டும். செல்ஃபோன், கம்ப்யூட்டரின் வெளிச்சத்தை குறைத்துக் கொள்வது நல்லது.