Tap to Read ➤

மனைவி நேசிக்கும் கணவராக வாழ எளிய டிப்ஸ்!

மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
HTML Tamil
ஒருசில சாதாரண விஷயங்களை நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணித்தாலோ பெண்கள் வெறுப்படைகின்றனர்.
சில எளிய வழிமுறைகளை ஆண்கள் கடைபிடித்தாலே, மனைவியால் நேசிக்கும் கணவராகி, எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம்.
வேலைக்காரியைப் போல மனைவி இருக்க வேண்டும் என நினைக்காமல், வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.
மனைவி செய்யும் சமையலை, தினமும் கணவர் பாராட்ட வேண்டும். சமையல் செய்யும் மனைவிக்கு, உதவிகரமாக இருக்க வேண்டும்.
மனைவி அணியும் ஆடைகள் மிகவும் நன்றாக இருக்கிறது என கணவர் பாராட்டினால் மனைவி மகிழ்ச்சி அடைவார்.
மனைவியின் விருப்படி, அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு கணவர் அழைத்துச் செல்ல வேண்டும்.
மனைவியை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.
விடுமுறை நாட்களில் விரும்பியபடி மனைவியை ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். விசேஷமாக சமையல் செய்ய வற்புறுத்தக்கூடாது.
கணவர், மனைவியும் தினமும் குடும்பம் தொடர்பாக, ஒருமுறையாவது சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாவிட்டால், மனைவியை திட்டக்கூடாது. குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு என்பதை மறக்கக்கூடாது.
இதுபோன்ற சிறு சிறு விஷயங்களில் மனைவியின் விருப்படி கணவர் நடந்து கொண்டால், குடும்பம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.