Tap to Read ➤

வாழ்க்கையில் சாதனையின் உச்சிக்கு செல்ல எளிய டிப்ஸ்!

வாழ்க்கை முறையை மாற்றினால் சாதித்து காட்டலாம்.
HTML Tamil
உடலுழைப்பை அதிகரிப்பது மட்டுமே நம்மை உயர்த்தும். ஆனந்தமும் ஆரோக்கியமும் அதில்தான் கிடைக்கும்.
வாழ்க்கையின் வெற்றிக்கு தோல்வியும் தேவை. தோல்வி அடைந்தவருக்கு மட்டுமே வெற்றியும் கிடைக்கும்.
ஆத்திரத்தை அகற்ற வேண்டும். எதற்கும் கோபப்படாமல் இருக்க வேண்டும்.
வேலை சொல்லித் தருபவரிடம் மிகவும் பணிவாக இருந்தால், மென்மேலும் உயரலாம்.
நம்மிடம் அன்பு செய்தால் நன்றி சொல்ல வேண்டும். நன்றியுணர்வு நம்மைப் பெரியவனாக்கும்.
நம்மை அலட்சியப்படுத்தினால் கோபப்படக்கூடாது. நட்புக்கு நட்பு செய்து, பகைவனையும் நேசிக்கப் பழக வேண்டும்.
யாரேனும் நம்மை கேலி செய்தால், ஆத்திரப் படாமல் புன்னகையை பரிசாக்க வேண்டும்.
தியானம் செய்ய வேண்டும், நம்மை உணர்ந்து கொள்ள அது மட்டுமே வழி காட்டும்.
தாய், தந்தையைப் போற்றி வணங்க வேண்டியது நமது கடமையாகும்.
இரவு உறங்கும் முன்பாக நடைப் பயிற்சி செய்தால், தூக்கம் இன்பமாக இருக்கும்.
சிறந்த புத்தகங்களை துணையாக கொள்ள வேண்டும். அதைவிட சிறந்த நண்பன் யாரும் இல்லை.