Tap to Read ➤

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட எளிய டிப்ஸ்!

வீட்டிலுள்ள கொசுக்களை இயற்கை பொருட்களை பயன்படுத்தி விரட்டலாம்.
HTML Tamil
மழை போன்ற பருவ காலங்களில், கொசுக்கடி காரணமாக, மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வந்து அச்சுறுத்துகின்றன.
வீட்டில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த சுருள் வத்திகள், மின்சார கொசு விரட்டி இயந்திரத்தை நாள்தோறும் பயன்படுத்துகிறோம்.
சுருள் வத்தி எரியும் போது வரும் புகையை சுவாசிப்பதால் பல்வேறு விதமான சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் கொசு விரட்டி இயந்திரத்தில் உள்ள திரவ ரசாயனத்தில் இருந்து வரும் நெடியாலும் சுவாச கோளாறுகள் வரும் என கூறுப்படுகிறது.
இதற்கு மாற்று வழியாக, செலவில்லாமல், பாதுகாப்பாக இயற்கையான முறையில் கொசுக்களை எப்படி விரட்டலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சைப் பழத்தை பாதியாக வெட்டி, அதில் ஆங்காங்கே கிராம்பை நட்டு வைக்கலாம். இதன் வாசனையால் கொசுக்கள் ஓடிவிடும்.
பூண்டு பற்கள் சிலவற்றை நசுக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், ஸ்பிரே பாட்டில் மூலம் தெளித்தால் கொசுக்கள் ஓடிவிடும்.
துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி வீடு முழுவதும் தெளித்தால் கொசுக்கள் வராது.
வேப்ப இலைகளை நீரில் கொதிக்க வைத்து, மாலை நேரங்களில் ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி வீடு முழுவதும் தெளித்தால் கொசுக்கள் ஓடி விடும்.
கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து, ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் தெளித்து கொசுக்களை விரட்டலாம்.
புதினாவை தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவமும் தெளித்தால், இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் ஓடிவிடும்.
யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து, மாலை நேரங்களில் வீடு முழுவதும் புகைப் போட்டால், கொசுக்கள் வீட்டினுள் நுழையாது.
வேப்ப எண்ணெய் உடன் தேங்காய் எண்ணெய்யைக் கலந்து, உடலில் தேய்த்துக் கொண்டால், கொசுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.