Tap to Read ➤

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த எளிய டிப்ஸ்

இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம்.
HTML Tamil
எந்த நோயையும் எதிர்த்து போராட, நமது உடலுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமானதாகும்.
வைரஸ் தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கை முறை மாற்றங்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே நாம் பெற முடியும்.
உணவு பழக்கத்தில் அலட்சியம் காட்டாமல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், இதனை தினமும் உட்கொள்ள வேண்டும்.
வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்ட பூண்டு, மஞ்சள், வெங்காயத்தை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.
நட்ஸ் உணவுகள், நோய் எதிர்ப்பு சக்திக்குக் காரணமான வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை தூண்டி, நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது.
உடலை நல்ல நீரோட்டமாக வைக்கும் வகையில், தேனீர் மற்றும் பழச்சாறுகள், நீச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தூக்கமின்மை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. எனவே ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கினால் இம்மியூனிட்டி அதிகரிக்கும்.
உடல் எடை அதிகரிக்காமல் முறையாக பார்த்துக்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே அதிகரிக்கத் தொடங்கும்.
மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி செய்யலாம். பிடித்த விஷயங்களை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டலாம்