Varalakshmi N       Jan 26, 2026

சிறுதானிய ஸ்பெஷல் தினை இனிப்பு பணியாரம் ரெசிபி!

ஆரோக்கியமும் சுவையும் சேர்த்த பாரம்பரிய சிற்றுண்டிகள் அதிகம்       விரும்பப்படுகின்றன. அந்த வகையில் சத்துக்கள் நிறைந்த சிறுதானியமானதினையால் தயாரிக்கப்படும் இனிப்பு பணியாரம்

சிறுதானிய இனிப்பு பணியாரம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்

தேவையான பொருட்கள்: தினை அரிசி -150 கிராம், சிவப்பு அரிசி - 50       கிராம், உளுந்தம் பருப்பு - 1/2 டம்ளர், வெந்தயம் - 1 மேசைக்கரண்டி,       வெல்லம் - 200 கிராம், எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: தினை அரிசி, சிவப்பு அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம்       ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் நன்றாக மிருதுவாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்

வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அரைத்த மாவுடன்       சேர்த்து நன்றாக கலக்கவும்

பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி, ஒவ்வொரு குழியில் சிறிது       எண்ணெய் தடவவும்.அதில் மாவை ஊற்றி 10 நிமிடங்கள் நன்றாக வெந்து       பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்

இருபுறமும் திருப்பி வேகவைத்து சூடாக எடுத்து பரிமாறவும்.  சுவையாக மட்டுமல்ல செரிமானத்துக்கு உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது