Tap to Read ➤

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கட்டாயம் இதையெல்லாம் தவிருங்கள்..!!

மொபைல் போன் வைத்திருப்பவர்கள் செய்யும் தவறுகள் !!
Sidhanathan K
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றோம்.
ஸ்மார்ட் போனை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்த நாம் மற்றவர்களிடம் முகம் கொடுத்து பேசுவதையே மறந்து விட்டோம்.
நாம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதை விட ஸ்மார்ட்போன் தான் நம்மை பயன்படுத்துகிறது என்று கூறலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போன்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
மொபைல் போனில் கட்டாயம் லாக் (Lock) பயன்படுத்துங்கள். ஏனென்றால் மொபைல் தொலைந்துபோனால் கூட மற்றவர் பயன்படுத்த முடியாது. அதேபோல் மற்றவர்களிடம் இருந்து பாதுகாப்பாகவும் இருக்கும்.
பிலே ஸ்டார் ஆப் தவிர மற்ற ஆப்களை மொபைலில் இன்ஸ்டால் செய்யாதீர்கள். மற்ற ஆப்களை பயன்படுத்துவதன் மூலம் கட்டாயம் தகவல்கள் திருடப்படலாம்.
Free wifi பயன்படுத்திடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஹேக்கர்ஸ் நம் தகவல்களை திருட வாய்ப்புள்ளது. முடிந்த அளவுக்கு மொபைல் டேட்டாவை பயன்படுத்துங்கள்.
மொபைல் போனுடன் கொடுக்கப்பட்ட சார்ஜரை தவிர மற்ற போன்களின் சார்ஜரை பயன்படுத்தாதீர்கள்.
தினமும் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து ஆன் செய்யவும் அல்லது ரீஸ்டார்ட் செய்யவும்.
மொபைலில் பேக் கவர் மற்றும் டெம்பர் க்ளாஸ் இல்லாமல் பயன்படுத்தாதீர்கள். மொபைல் போன் கை தவறி கீழே விழுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.
தேவைப்படும் போது மட்டும் புளூடூத்தை ஆன் செய்து மற்ற நேரங்களில் ஆஃப் செய்வது நல்லது.
ஏனென்றால், தொடர்ந்து ஆன் செய்து வைத்திருந்தால் சார்ஜ் விரைவில் குறையும்.
மேலும் புளூடூத்தை ஆன் செய்து வைத்திருப்பதால் வைரஸ்கள் போனுக்குள் நுழையும் வாய்ப்புகள் அதிகம்.