Tap to Read ➤

சின்ன வெங்காயத்தில் இவ்வளவு நன்மைகளா?

பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் எண்ணற்ற நற்பலன்கள் உள்ளன.
HTML Tamil
சின்ன வெங்காயத்தில் கால்சியம், மினரல், வைட்டமின், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன.
நாள்தோறும் ஒரு சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் ரத்தக்குழாயை அடைக்கும் கொழுப்பை கரைத்து, இதய நோய் வராமல் தடுக்கும்.
சின்ன வெங்காயம் வயிற்றிலுள்ள சிறு குடல் பாதையை சுத்தப்படுத்தி, உணவு செரிமாணத்திற்கு பெரிதும் உதவுகிறது.
ரத்த அழுத்தத்தை குறைக்கவும், இழந்த சக்தியை மீட்கவும் சின்ன வெங்காயம் பெரிதும் பயன்படுகிறது.
புகைப் பிடிப்பவர்கள் சின்ன வெங்காயத்தின் சாற்றை, 3 வேளையும் அரை அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சுத்தமாகும்.
மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெய்யை கலந்து தடவினால் வலி நீங்கும்.
முகப்பரு உள்ள இடத்தில், சின்ன வெங்காயத்தை நறுக்கி தொடர்ந்து தேய்த்து வந்தால் முகப்பரு நீங்கி விடும்.
சின்ன வெங்காயச் சாற்றுடன் சிறிது உப்புக் கலந்து, அவ்வப்போது குடித்து வந்தால் மாலைக்கண் நோய் சரியாகி விடும்.
வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குறையும். வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து குடித்தால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
இன்சிலின் உள்ள சிறிய வெங்காயத்தை நீரழிவு நோயாளிகளும் அதிகம் பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்.
சின்ன வெங்காய சாற்றோடு சர்க்கரை கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும்.
தலையில் ஆங்காங்கே முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறிய வெங்காயத்தை இரண்டாக நறுக்கி தேய்த்து வந்தால் முடி வளரும்.
சின்ன வெங்காயத்தை நாள்தோறும் உண்டு வந்தால், டிபி நோய் குறையும். வெங்காய சாற்றொடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாத நோய் குறைய வாய்ப்புள்ளது.