Varalakshmi N       Feb 16, 2026

2 வாரத்தில் மிருதுவான தோல் - பனிக்கால சிறப்பு குறிப்புகள்..!

பனிக்காலங்களில் குளிர் மற்றும் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், சருமம்  எளிதில் வறண்டு வெடிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக வறண்ட சருமம்  உடையவர்களுக்கு இந்த பிரச்சனை அதிமாக காணப்படும்

இரண்டு வாரங்களில் வறண்ட சருமம் மிருதுவான தோலாக மாற எளிய பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை காணலாம்

ஆலிவ் எண்ணெய் 5 சொட்டு துளிகளை பாலுடன் கலந்து காலை மற்றும் மாலை  நேரங்களில் பருகலாம். இது உடலுக்கு உள்ளிருந்து ஈரப்பதத்தை வழங்கி சரும  வறட்சியை குறைக்க உதவும்

மருதாணி இலை 1 பிடி, மஞ்சள்பொடி -1 ஸ்பூன், வேப்பிலை -1/2 பிடி, இவற்றை  சிறிதளவு பால் சேர்த்து அரைத்து, இரவு படுக்கும் முன் வெடிப்புகள் உள்ள  இடத்தில் தடவ வேண்டும். தொடர்ந்து செய்தால் சருமம் மிருதுவாகும்

நெய், பால் ஏடு, வெண்ணெய் சம அளவில் கலந்து தினமும் பயன்படுத்தி வந்தால், 10 நாட்களில் தோல் வறட்சி மற்றும் வெடிப்புகள் குறையும்

இயற்கை வழிகளை தொடர்ந்து பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவும்