Tap to Read ➤

கழுதைப்புலிகள் பற்றிய சில பிரமிப்பூட்டும் தகவல்கள்!

கழுதைப்புலி ஓர் அனைத்துண்ணி விலங்காகும்!
varalakshmi n
புலியைப் போல் முகத்தோற்றம், பின்னங்கால் வலுவற்று நடக்கும் போது கழுதை போல் பின்னுவதால் கழுதை புலிக்கு இப் பெயர் வந்திருக்கலாம்
கழுதைப்புலி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலைந்து இரை தேடும் ஓர் அனைத்துண்ணி விலங்காகும்
இந்தியா,ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள்,பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் காணப்படுகிறது
ஒரே இடத்தில் வசிக்காதவை; ஒரு நீர் நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலையைத் தேடி அலைந்து திரிந்துகொண்டிருக்கும்
கழுதைப்புலிக்கு கடுவாய்,என்புதின்றி, கொடுவாய், தரக்கு, புலிக்குடத்தி, கழுதைக்குடத்தி,கழுதைக்குறத்தி, வங்கு என்ற பிற பெயர்களும்உண்டு
அவற்றின் மின்னுகின்ற கண்கள், சேற்று மண் அப்பிய மேனி, மந்தகாச நடை ஆகியவை மனிதப் பார்வைக்கு இனம் புரியாத அச்சத்தை ஏற்படுத்தும்
இதன் மயிர் அடர்த்தியான வால்கள் பின்னங்கால் வரை நீண்டவை
இந்தியாவில் காணப்படும் கழுதைப் புலிகள் 1.2 -1.45 மீட்டர் உயரமும், 26 -41 கிலோ எடையும் கொண்டவை
மற்ற விலங்குகளை பயமுறுத்த தன் உடல் மயிர்களை செங்குத்தாக நிமிர்த்தும்
வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டிருப்பினும்,பிற விலங்குகள் கொன்று, விட்டுச் செல்லும் எச்சங்களையேத் உண்ணும்
கழுதைப் புலிகள் வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும்
2-3 வருடங்களில் பருவமடைந்து,பேறுகாலம் 88 முதல் 92 நாட்கள்,குட்டிகளை பெரும்பாலும் குகைகளில் ஈன்றெடுக்கும்
முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் காடுகள்,நீலகிரி வனச்சரகம்,வெலவாடார் தேசிய பூங்கா போன்ற பல்வேறு இடங்களில் காணப்படும்