ஆண்களை விட பெண்கள் மல்டிடாஸ்கிங் செய்வதில் சிறந்தவர்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஒரு நாளுக்கு 20,000 வார்த்தைகள் வரை பேசுவார்கள். பெண்களுக்கு தான் பேசுவதை பிறர் கேட்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
பெண்கள் தனக்கான உடையைத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே வாழ்நாளில் சுமார் ஒரு வருட காலத்தைச் செலவழிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், பெண்கள் தங்கள் இரு காதுகளாலும் ஒரே நேரத்தில் வெவ்வேறு விஷயங்களைக் கேட்கும் திறன் கொண்டவர்கள்.
பிறர் பேசும் பொய்யை எளிதாக கண்டுபிடிக்கும் திறன் அவர்களுக்கு உண்டு.
வண்ணங்களை பிரித்து பார்க்கும் திறனும் பெண்களுக்கு ஆண்களை விட 20 சதவீதம் அதிகமாக உள்ளது.
பெண்கள் அழுவதற்கு பெரிய காரணம் தேவையில்லை. பெரும்பாலான பெண்கள் மற்றவர்கள் அழுவதைப் பார்த்து அழுவார்கள்.
ஆண்களை விட பெண்களே இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் சிறிய பிரச்சனைகளுக்கு கூட அதிகம் கவலைப்படுவார்கள். அதேசமயம் அவர்களால் கவலைகளில் இருந்து விரைவில் மீள முடியும்.
பெண்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து. பிரசவத்தின் போது அவர்கள் படும் வலியை இந்த உலகில் எந்த மனிதனும் தாங்க முடியாது என்பது உண்மை.
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1600 பெண்கள் பிரசவத்தில் இறக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.