Tap to Read ➤

காலையில்  செய்ய வேண்டிய சில நல்ல பழக்கங்கள்

ஆரோக்கியமாக வாழ காலையில் சில நல்ல பழக்கங்களை செய்வது அவசியம்.
HTML Tamil
நம் முன்னோர்கள் அதிகாலையிலேயே நீராடி, பூஜை மற்றும் தியானம் செய்து, மனதை ஒழுங்குப்படுத்தி மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில், கலையில் தூங்கி எழுந்ததும் முதலில் செல்ஃபோனைத்தான் பார்க்கத் தோன்றுகிறது.
தினமும் காலையில் சில நல்ல பழக்கங்களை கட்டாயம் கடைபிடித்து வந்தால், எப்போதும் ஆரோக்கியமாக வாழலாம்.
இரவில் செல்ஃபோன், டிவி பார்ப்பதை தவிர்த்து விட்டு, 10 மணிக்குள் தூங்கினால் காலை 6 மணிக்குள் தூக்கம் இயல்பாக கலைந்துவிடும்.
அதிகாலை எழுந்த உடன், 10 நிமிடங்கள் தியானம் செய்தால், மனம் புத்துணர்ச்சி பெறும்.
காலையில் காப்பி, டீ குடிப்பதை விட, உள்ளுறுப்புகள் புத்துணர்ச்சி பெற, சோம்பு அல்லது சீரகம் கலந்த சூடான நீரை பருகலாம்.
காலையில் சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள் செய்தால், நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம்.
6 மணி முதல் 7 மணிக்குள் நடைப் பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்து வந்தால், உடல் ஆரோக்கியத்துடன் நலமாக வாழலாம்.
5 நிமிடங்கள் வரை, நல்லெண்ணெய் மூலம், வாயில் ஆயில் புல்லிங் செய்தால், வாயில் இருக்கும் கிருமிகள் அழிந்து ஆரோக்கியம் ஏற்படும்.
காலையில் குளிர்ந்த நீரில் குளித்தால், உடலில் உள்ள வெப்பம் தணிவதோடு, சோம்பல் இல்லாமல் புத்துணர்ச்சியாக இருக்கலாம்.
குளித்த பின்னர் 10 நிமிடங்கள், நம் உடல் மீது சூரிய ஒளி படும்படி நிற்பது நல்லது. இதனால் உடலுள்ள தேவையற்ற நீர் வெளியேறிவிடும்.