Tap to Read ➤

விலையுயர்ந்த மொபைல் போன்களில் உள்ள இ-சிம் பற்றிய சில தகவல்கள் !!

எதிர்காலத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தும் eSIM தொழில்நுட்பம் !
Sidhanathan K
Embedded SIM-இன் சுருக்கமே E-SIM. ஏனென்றால் மொபைல் போனின் மதர்போர்டில் இ-சிம் தொழில்நுட்பம் உட்பொறுத்தப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள மொபைல் போன்கள் ஆரம்பத்தில் பெரிய சிம் கார்டுகளுடன் வந்தன. பின்னர் அந்த பெரிய சிம்கள் படிப்படியாக சிறிய சிம்களாகவும் மைக்ரோ சிம்களாகவும் மாறி தற்போது இ-சிம் பயன்பாட்டில் உள்ளது.
எல்லா ஸ்மார்ட்போன்களும் இந்த இ-சிம் தொழில்நுட்பத்தை ஆதரிக்காது. மாறாக இவை ஐபோன், கூகிள் பிக்சல் போன்ற விலையுயர்ந்த போன்களில் முதன்மையாக உள்ளன.
சாதா சிம்மின் அனைத்து வசதிகளும் இ-சிம்மில் உண்டு. ஆனால் இ-சிம்மை நினைச்சமாதிரி கழட்டி வேறொரு போனில் போட முடியாது.
வழக்கமான சிம் போலல்லாமல், ஜியோ, ஏர்டெல் அல்லது விஐ போன்ற ஆபரேட்டர்களால் இ-சிம் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படுகிறது.
இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால், சிம் கார்டின் டிஜிட்டல் நகல்தான் இந்த இ-சிம்.
அதே சமயம் நம்மால் ஒரே எண்களை கொண்ட சாதா சிம்மும், இ-சிம்மும் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலாது.
இ-சிம் செயல்படுத்தப்பட்ட பிறகு சாதா சிம் கார்டு வேலை செய்யாது.
இந்த இ-சிம்மின் வருகையால் மொபைல் போன்களில் சிம் ஸ்லாட் இடம் குறைகிறது.