Tap to Read ➤

வீடு கட்ட பார்க்கப்படும் ஈசானிய மூலை பற்றிய சில தகவல்கள் !!

சிவனின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட பகுதி..!!
Sidhanathan K
வடகிழக்கு என்பது வாஸ்து சாஸ்திரத்தின்படி எட்டு திசைகளில் ஒன்றாகும். அதாவது கிழக்கு மற்றும் வடக்கு திசைகளுக்கு இடைப்பட்ட பகுதி ஈசானிய மூலை அல்லது சனி மூலை எனப்படுகிறது.
ஈசானியம் வீட்டின் தலைப்பகுதியாகும். வீட்டிற்க்கு ஈசானிய மூலை சரிவர பொருத்தி விட்டால் கெட்ட காலத்திலும் நன்மையே உண்டாகும். இது ஜோதிட சாஸ்திரப்படி அவரவர் கர்ம வினை பொறுத்து அமையும்.
எட்டுத் திசைகளும் 8 தெய்வங்களால் ஆளப்படுகின்றன. இதன் கிழக்கு மூலை சிவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக கருதப்படுகிறது.
வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.
ஈசானிய மூலை எடை குறைவாக சுத்தமான பகுதியாக இருக்கவேண்டும் என்பது வாஸ்து சாஸ்திர விதியாகும். அதாவது வடகிழக்கு மூலை வெட்ட வெளியாக திறப்பாக இருப்பது, எல்லாவிதமான புகழ், செல்வாக்கு, செல்வம், அறிவு, வருமானம் வரும் பகுதி மற்றும் நோய் நொடிகள் அனுகாது.
ஈசானிய மூலை வீட்டிற்க்கு நல்ல அதிர்வுகளை உண்டாகக் கூடிய இடம். ஆதாலால் ஈசானிய மூலைக்கு உரிய விதி விளக்கின் படி அதிர்வளைகள் தடைகளால் பாதிப்பு அடையாமல் அமைக்க வேண்டும்.
மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது.
ஈசான்யம் அடைபடும் வீடுகளில் காதல் திருமணம் நடைபெறும்.
ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்ப்பது நல்லது.
ஈசானிய மூலையில் உயரமான துளசி மாடம், மாடிப்படி, சமையல் அறை கட்டக்கூடாது. ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது.
ஈசானியம் கெட்டால் அம்மனையில் வாழ்பவரின் தலையில் பாதிப்புகள் உண்டாகும்.