Tap to Read ➤

திரைப்படங்களில் கொடூரமாக காட்டப்படும் பிரானா மீன் பற்றிய சில தகவல்கள்!

அனைத்துண்ணியான பிரானா மீனின் குணங்கள்..!!
Sidhanathan K
'பிரானா' என்றால் அமேசானின் பழங்குடி மொழியில் 'மீன் பல்' என்று பொருள். இவை அமெரிக்க நாடுகளின் ஆறுகள், ஏரிகள் மற்றும் பங்களாதேஷின் கப்டாய் ஏரியில் சில இனங்கள் மட்டுமே காணப்படுகின்றன.
பிரானாவின் உடல் சேற்றில் மறைந்துகொள்வதற்கு ஏதுவாக வெள்ளி நிறத்தில் சிவப்பு புள்ளிகளுடன் இருக்கும். பற்கள் ஈட்டிகளைப் போல கூர்மையானவை.
இந்தப் பற்களால் இரும்புக் கொக்கியைக் கூட கடிக்க முடியும். அதனால் தான் என்னவோ பழங்குடியினர் பிரானாவின் பற்களால் ஆயுதங்களைக் கூட தயாரித்துள்ளனர்.
இந்த வகை மீன்கள் நத்தை, மீன், தாவரங்கள், விதைகள் மற்றும் பழங்கள் போன்ற அனைத்தையும் உண்கின்றன.
சில நேரங்களில் பாலூட்டிகளையும் தண்ணீருக்குள் வரும்/விழும் ஆடு, கோழி, பறவைகளையும் கூட சாப்பிடுகின்றன..
இரை கிடைக்காவிட்டால் பிரானா மீன்கள் தங்களுக்குள் சண்டையிட்டு சக மீன்களைக் கொன்று தின்னும். பிரானாக்கள் கூட்டமாக வாழும் பண்புடையவை. ஒரு கூட்டத்தில் 1000 மீன்கள் வரை இருக்கும்.
பிரானா மீனில் மிகவும் ஆபத்தானது சிவப்பு பில்லி பிரானா மீன். தன் இரையைக் கண்டதும் சக மீன்களுக்கு சிக்னல் செய்து கூட்டமாக சென்று இரையைத் தாக்கி சாப்பிட்டு விடும்.
ஒரு நிமிடத்தில் அனைத்து பிரானாக்களுக்கு ஒன்று கூடி மொத்தமாக சேர்ந்து எதிரியை அடித்து சாப்பிடும். அதில் எலும்பை மட்டும் மிச்சம் வைக்கும்.
விம்பல் பிரானா என்ற வகை மீனின் உடலுக்குள் மட்டுமல்ல உடலுக்கு வெளியேயும் முட்கள் உள்ளன. எந்த உயிரினமும் தன்னை தாக்க வந்தால் அந்த முட்களை கொண்டு எதிரியை தாக்கி தானே தின்றுவிடும்.
ஆண் பிரானாக்கள் தண்ணீருக்கு கீழே மண்ணுக்கு அடியில் குழி தோண்டி அதற்குள்ளே கூடு ஒன்றை கட்டும். அதற்குள்ளே தான் பெண் பிரானாக்கள் ஆயிரக்கணக்கான முட்டைகளை இடும்.
முட்டைகள் அனைத்து குஞ்சு பொரித்து மீன்களாக வெளியே வரும் வரை தாயின் பாதுகாப்பில் தான் இருக்கும்.
கருப்பு பிரானாக்களுக்கு தாடைகள் மிகவும் வலிமையாக அமைந்திருக்கும். முதலை போன்று பெரிய எலும்பாக அமைந்திருந்தாலும் இந்த வகை பிரானாக்கள் அடித்து சாப்பிட்டு விடும்.
பிரானாக்கள் மனிதர்களை தாக்குவதில்லை. ஆனால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் மனிதர்களையும் விட்டுவைப்பதில்லை.
2017ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் நீரில் நீந்திக் கொண்டிருந்த 70 பேரை பிரானா கடித்துள்ளது.
ஹாலிவுட் படங்களில் வருவது போன்று பிரானா வகை மீன்கள் கொடூரமாக இல்லாவிட்டாலும் அவை மனிதர்களையும் கடிக்கக்கூடியவை தான்.
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பிரானா மீன்கள் தனித்தனி தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. பல்லிகள், தவளைகள், எலிகள் போன்றவை அவற்றுக்கு உணவளிக்கப்படுகின்றன.