Tap to Read ➤

நாய்கள் பற்றிய சில சுவாரஷ்யமான விஷயங்கள்

நம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய் பற்றி சில உண்மைகள் !!
Sidhanathan K
உலகிலேயே அதிகமாக வளர்க்கப்படும் செல்லபிராணி என்றால் அது நாய்கள் தான்.
உலகில் எல்லா நாடுகளிலும் எல்லா காலநிலைகளிலும் வளரக்கூடிய ஒரே விலங்கு நாய்!
ஆயுள் காலம் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். நாய்க்கு 42 பற்கள் உண்டு.
அதன் இதயத் துடிப்புகள் ஒழுங்கற்றவை. 70 முதல் 120 வரை மாறுபடும்.
முன்காலில் 6 விரல்களும் பின்காலில் 4 விரல்களும் இருக்கும். மூளையின் எடை 6 அவுன்ஸ்.
மனிதர்கள் பேசும் 1000-ற்கும் மேற்பட்ட வார்த்தைகளை நாய் இனத்தினால் புரிந்துக்கொள்ள முடியும்.
நாயானது 1 மணி நேரத்தில் 19 மைல் தூரம் வரை ஓடும் ஆற்றல் உடையது.
நாய்களுக்கு கருப்பு, வெள்ளை ஆகிய இரு நிறங்கள் மட்டுமே தெரியும். உண்மையில் சில நிறங்களை நாய்களால் பார்க்க முடியும். ஆனால் நம்மைப் போல வேறுபடுத்தி பார்க்க முடியாது.
நாய்களுக்கு மனிதனின் மோப்பச் சக்தியைபோல 100 மடங்கு அதிகம்.
மனிதர்களுக்குள் இருக்கும் கேன்சர் போன்ற நோய்களையும் நாய் மோப்ப சக்தியின் மூலம் கண்டறிந்துவிடும்.
நாய்களுக்கு சாக்லேட் கொடுப்பது மிக ஆபத்தானது. சாக்லெட்டின் வகை மற்றும் அளவைப் பொருத்து ஆபத்தின் தீவிரம் அதிகரிக்கும்.