Sidhanathan K       Jan 23, 2025

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தினால் சந்திக்கும் சில மோசமான விளைவுகள்..!!

உடலில் இன்சுலின் எனும் ஹார்மோன் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் போது, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதோடு தினமும் தவறாமல் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரை, கிளைசெமிக் இன்டெக்ஸ், கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் சில பழங்கள் தித்திப்பாக இருப்பதோடு, கிளைசெமிக் இன்டெக்ஸை அதிகம் கொண்டுள்ளன. அப்படி கிளைசெமிக் இன்டெக்ஸை அதிகம் கொண்ட பழம் தான் வாழைப்பழம்.

சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க சிறிய அளவிலான வாழைப்பழத்தை ஆசைக்காக சாப்பிடலாம்.

அளவுக்கு அதிகமாக கனிந்த வாழைப்பழத்தை தவிர்த்து, லேசாக பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழத்தை நட்ஸ், யோகர்ட், சூரியகாந்தி விதைகள் அல்லது வேர்க்கடலை வெண்ணெய் போன்ற புரோட்டீன் உணவுகளுடன் எடுக்கும் போது, சர்க்கரையை உறிஞ்சும் திறன் தாமதப்படுத்தப்படும்.

எனவே, வாழைப்பழம் சாப்பிடும் போது, மற்ற பழங்களை அல்லது மேலே கூறியவற்றை அதிகம் எடுப்பதை தவிர்ப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்கலாம்.