Sidhanathan K       Nov 05, 2024

உலகில் காணப்படுகின்ற சில விசித்திரமான இடங்கள்..!!

ஆயிரக்கணக்கான கொடிய விஷப்பாம்புகள் உள்ள இந்த தீவிற்கு மக்கள் செல்ல அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும், உலகிலேயே அதிக நச்சுத்தன்மை கொண்ட Golden Spearhead பாம்பு இங்கு காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

பிரேசிலில் உள்ள பாம்பு தீவு

ரஷ்யாவில் தெற்கு யூரல் மலையில் பேய்கள் மற்றும் அமானுஷ்யங்கள் நிறைந்ததாக நம்பப்படுகின்ற Mezgorye நகரம் உள்ளது. இங்கு வெளியாட்களுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது, எப்படி இப்படி ஒரு மர்ம இடம் வந்தது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ரஷ்யாவின் பேய் நகரம்

ஐஸ்லாந்தில் 1963 மற்றும் 1967 க்கு இடையில் எரிமலை வெடிப்பு காரணமாக உருவான இந்த தீவில் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு செல்ல முடியும்.

சுர்ட்சே தீவு

சீனாவின் முதல் ஆட்சியாளரான Tomb of Qin Shi Huang-ற்கு சொந்தமான இந்த இடம் 1974 கண்டறியப்பட்டது. வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த கல்லறையை மிகவும் மர்மமானதாக கருதுகின்றனர்.

கின் ஷி ஹுவாங் கல்லறை

பூகம்பங்கள் மற்றும் எந்த வகையான வெடிப்புகளாலும் பாதிக்கப்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பெட்டகத்தில் சுமார் 100 மில்லியன் தாவரங்களின் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன. பேரழிவு ஏதேனும் ஏற்பட்டால் இந்த விதைகளை பயன்படுத்தி உலகை மீண்டும் புதுப்பிக்க இயலும்.

ஸ்வால்பார்ட் குளோபல் விதை பெட்டகம்

ஜப்பானில் உள்ள Ise Grand Shrine, சூரியன் மற்றும் பிரபஞ்சத்தின் கடவுளான அமதேராசுவின் நினைவாக கட்டப்பட்ட ஷின்டோ மதத்தின் முக்கியமான தளமாகும். இங்கு பூசாரிகள் மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே செல்ல முடியும்.

ஐஸ் கிராண்ட் ஷிரின்