Sidhanathan K       May 04, 2024

கண்களை சுற்றி உள்ள கருவளையம் நீங்க சில எளிய வழிமுறைகள்..!!

முதலில் கண்களை சுத்தமான நீரில் கழுவி, பின் சுத்தமான காட்டனை எடுத்து, பன்னீரில் நனைத்து, கண்களின் மேல் வைத்து வர, கண்கள் குளிர்ச்சியடையும், இறுதியில் கருவளையங்கள் மறைந்துவிடும்.

பாதாமை சிறிதளவு பாலுடன் கலந்து, பேஸ்டாக அரைத்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி, 10 முதல் 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மறைந்துவிடும்.

1 ஸ்பூன் மஞ்சள் தூளில் 2 ஸ்பூன் அளவு தேன் கலந்து நன்றாக குழைத்து, கருவளையம் இருக்கும் இடத்தில் பேஸ் பேக் போல போட்டுக்கொள்ளலாம்.

ஒரு ஸ்பூன் தக்காளிச் சாறுடன் ஒன்றரை ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சில வாரங்களில் கருவளையம் மறைந்துவிடும்.

சுத்தமான தேங்காய் எண்ணெயை காட்டனில் தொட்டு கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால், கருவளையங்கள் மறையும்.

குளிர்ந்த பாலில் காட்டனை நனைத்து கண்களில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.

ஆலிவ் ஆயில் கொண்டு கண்களில் மசாஜ் செய்தால் கண்கள் களைப்பு நீங்கி கருவளையம் மறையும்.

வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்திருந்தால் கண்களின் சோர்வு நீங்குவதுடன் கருவளையங்களும் மறையும்.

வெள்ளரிக்காயை பேஸ்ட் போல அரைத்து கண்களில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் கருவளையம் மறையும்.

வெள்ளரி விதைப் பொடியை தயிருடன் கலந்து பேஸ்ட் செய்து தடவி வந்தால், ஒரே மாதத்தில் கருவளையம் மறைந்துவிடும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories