Tap to Read ➤

வாய் துர்நாற்றத்தை தடுக்க சில எளிய வழிமுறைகள்..!!

வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன ?
Sidhanathan K
வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள். அதாவது அல்சர் நோய் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக வாய் துர்நாற்றம் வரும்.
தொண்டையில் உள்ள டான்சில் (Tonsil ) சுரப்பியில் பிரச்சனை ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும். அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உணவுக்குழாய் வழியாகச் செல்லும் உணவு நான்கு மணி நேரத்திற்கும் மேலாக செரிக்கப்படாமல் இருக்கும் போது, வயிற்றில் இருந்து புளிப்பு நாற்றம் வாய் வழியாக வரும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.
வாய் துர்நாற்றத்தைப் போக்க, காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன், இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் வாயில் விட்டு மூன்று நிமிடம் வரை வாயை நன்றாகக் கொப்பளிக்கவும்.
குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே பல் துலக்கிய பின் 4 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
எலுமிச்சை சாறுடன் தண்ணீர் கலந்து சிறிது உப்பு சேர்த்து தினமும் குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
வாயை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சில புதினா இலைகளை மென்று சாப்பிடலாம். புதினா வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கிறது.
சிறிது கிராம்பு எடுத்து நன்றாகப் பொடி செய்து, காலை உணவுக்குப் பின் சிறிதளவு விரல்களால் எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
அதிக அமிலம் மற்றும் காரைத்தன்மை கொண்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அதேபோல வெங்காயம், பூண்டு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்ப்பதையும் தவிர்க்கலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். இதனால் அஜீரணத்தை தடுக்கலாம். மது மற்றும் புகை பழக்கத்தை கைவிடுவது நல்லது.