Tap to Read ➤

பயணத்தின்போது வாந்தி வராமல் இருக்க சில எளிய டிப்ஸ்!

பயணிக்கும்போது மோஷன் சிக்னஸ்  சிலருக்கு  உண்டாகிறத.
HTML Tamil
பேருந்து மற்றும் கார்களில் பயணம் செய்யும் சிலருக்கு வாந்தி. குமட்டல் மற்றும் தலைச்சுற்றல், தலைவலி உண்டாகும்.
சாலையில் உள்ள மேடு மற்றும் பள்ளத்தால், வாகனங்களின் ஆட்டம் மற்றும் குலுக்கல் நிறைந்த பயணங்கள் சிலரை பாதிப்படைய செய்யும்.
இதுபோன்ற காரணங்களால் பயணம் என்றாலே ஒருசிலர் அரண்டு விடுவார்கள். கடும் அவஸ்தையால் சோர்ந்தும் விடுவார்கள்.
பயணத்தின்போது வாந்தி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படாமல் இருக்க, சில எளிய வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.
எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள மினரல்ஸ் வாந்தியை கட்டுப்படுத்தக்கூடியது. எலுமிச்சை பழத்தை சிறிது நீரில் கலந்து குடித்தால், வாந்தி வராது.
சோம்பு

வாகன பயணத்தின்போது சோம்பை வாயில் போட்டு மென்றால் வாந்தி வருவதை தடுக்கலாம்.
கிராம்பு

கிராம்பை வாயில் போட்டு மென்று வரலாம். கிராம்பின் வாசனையும், அதன் சுவையும் வாந்தி வருவதை தடுத்து நிறுத்திவிடும்.
இஞ்சி

பயணம் செய்யும் நேரங்களில், சிறிதளவு இஞ்சியை  நீரில் போட்டு, சிறிது தேன் கலந்து குடித்தால் வாந்தி பிரச்சனை இருக்காது.
புதினா

பயணத்தின்போது புதினா இலைகளை வாயில் வைத்து மென்று சுவைக்கலாம். புதினாவின் வாசனை புத்துணர்ச்சியை உண்டாக்கும்.
இலந்தை பழம்

வாகன பயணத்தின்போது இலந்தை பழத்தை சாப்பிட்டால் தலைச் சுற்றல், வாந்தி ஏற்படாது.
சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்ச் மற்றும் திராட்சைப் பழங்களை சாப்பிடலாம். இதன் சுவை மற்றும் புளிப்பு தன்மை, வாந்தி மற்றும் தலை சுற்றல் வராமல் தடுக்கும்.
சர்க்கரை+உப்பு

வாகன பயணத்தின்போது சர்க்கரையுடன் சிறிது உப்பை நீரில் கலந்து குடித்தால், உடல் வறட்சி அடையாமலும், வாந்தி வராமலும் தடுக்கலாம்