Tap to Read ➤

மூட்டு வலியை குணமாக்க சில எளிய டிப்ஸ்...!

வாட்டி வதைக்கும் மூட்டு வலியை வீட்டு வைத்தியம் மூலம் எளிதில் குணமாக்கலாம்.
HTML Tamil
40 வயதை தாண்டிய பலரும், முழங்கால் மூட்டுவலி பிரச்சனையால் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒருசிலருக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை வரை கொண்டுபோய் விட்டு விடுகிறது.
ஒரே இடத்தில் நின்றுகொண்டும், உட்கார்ந்தும் வேலை செய்பவர்களுக்கு, ரத்த ஓட்டத்தில் மாறுபாடு ஏற்படுவதால் மூட்டு வலி ஏற்படுகிறது.
மலச்சிக்கல், அதிக உடல் எடை, கால்சியம் சத்துக் குறைவு, யூரிக் அமிலம் மிகுதல், மெனோபாஸ் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் மூட்டு வலி ஏற்படுகிறது.
நமது உடலில் நீர் சத்து, சர்க்கரை சத்து மற்றும் உப்பு சத்து குறைவதால் கால் வலி மூட்டு வலி பிரச்சனை உண்டாகுகிறது.
டீ, காஃப்பி அதிகம் அருந்துதல், எண்ணெய் உணவுகள், இனிப்பு அதிகம் சேர்த்தல், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை அதிகம் எடுப்பதால் மூட்டு வலி ஏற்படுகிறது.
நாள்தோறும் அவதிப்பட வைக்கும் இந்த மூட்டு வலியை, வீட்டு வைத்தியம் மூலம் எளிதாக எப்படி குணமாக்கலாம் என்பதை பார்ப்போம்.
முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் இருப்பதால், இதனை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் மூட்டு வலியை குணமாக்கலாம்.
கால்சியம், தாதுக்கள், வைட்டமின் கே, வைட்டமின் - சி நிறைந்துள்ள கீரை வகைகளை, உணவில் நாள்தோறும் சேர்த்துக் கொள்ளலாம்.
பீன்ஸில் புரதச்சத்து நிறைந்து காணப்படுவதால், எலும்புகளை உறுதியாக்கும் தன்மை கொண்டது. இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் பலன் கிடைக்கும்.
பாதம் பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகளில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளன. எலும்புகள் வலுபெற இதனை தினமும் சாப்பிடுவது சிறந்தது.
நொச்சி இலைச் சாற்றுடன், மிளகு தூள், நெய் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி விரைவில் குணமாகும்.
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை கலந்து, சூடாக்கி, மூட்டில் தேய்த்து வந்தால் மூட்டு வலி சரியாகும்.
மூட்டு வீக்கம் குறைவதற்கு, சுக்கை நன்றாக அரைத்து, கொதிக்க வைத்து, மூட்டில் பூசி வந்தால் மூட்டு வீக்கம் குறைந்துவிடும்.
மூட்டு, இடுப்பு மற்று
வாத வலியால் அவதிப்படுபவர்கள், முருங்கை இலையை, விளக்கெண்ணெய்யில் நன்றாக வதக்கி, ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி சரியாகும்.