வீடு அல்லது தோட்டத்தில் விஷ ஜந்துக்கள் கடித்தால் வீட்டு வைத்தியம் மூலம் குணமாக்கலாம்.
HTML Tamil
தேனீக்கள் கடித்தால் குப்பைமேனி செடியின் இலை சாற்றை பிழிந்து, பூச்சிக் கடித்த இடத்தில் தடவினால், கடுகடுப்பு குறைவதோடு, விஷமும் இறங்கி விடும்.
தேனீக்கள் கொட்டினால், கொட்டிய இடத்தில் வெங்காயத்தை வெட்டி, சூடு பறக்க தேய்த்தால் குணமடையும்.
தேள் மற்றும் நட்டுவாய்க்காலி போன்றவை கொட்டினால், உடனடியாக கொப்பரை தேங்காயை நன்றாக மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கி விடும்.
தேள் கொட்டினால் உடனே எலுமிச்சை விதையுடன் உப்பை சேர்த்து சாப்பிட்டால் விஷம் இறங்கி விடும்.
வண்டுகள் கடித்தால் உடனே பப்பாளி மரத்தின் இலையை சாறு பிழிந்து, வண்டு கடித்த இடத்தில் 3 நாட்களுக்கு தொடர்ந்து தடவி வந்தால் பலன் கிடைக்கும்.
விஷப் பூச்சிக் கடித்தால், கரிசலாங்கண்ணியின் இலைகளின் சாறெடுத்து, அதில் பெருங்காயத்தை இழைத்து கடித்த இடத்தில் பற்றுப் போட்டால் விஷம் உடனே இறங்கி விடும்.