Tap to Read ➤

வசீகரிக்கும் முக அழகு பெற சில எளிய டிப்ஸ்!

அழகுதான் முதலில் தன்னம்பிக்கையை கொடுக்கிறது.
HTML Tamil
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதற்கேற்ப அவரவர் குணநலமே அவர்களின் அழகை பிரதிபலிக்கிறது.
முகத்திற்கு பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்களால் நிறம் மாறினாலும், விரைவில் சருமம் முதிர்ந்து, சுருக்கங்கள் உருவாகிவிடும்.
இயற்கை பொருட்கள் மூலம், முகத்தை பொலிவாகவும், அழகாகவும் எவ்வாறு மாற்றலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கடலைப் பருப்பு, பாசி பயிற்றுடன், காய்ந்த ஆவாரம் பூவை சேர்த்து அரைத்து, சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் முகம் பளிச்சிடும்.
தக்காளியுடன் மஞ்சளை கலந்து முகத்தில் தடவி வந்தால், சரும பிரச்சனைகளை நீக்கி, முகத்தை பளபளப்பாக வைக்க உதவும்.
பயத்தம் பருப்பு மாவுடன் எலுமிச்சை, புதினா சாற்றையும் கலந்து, முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவலாம்.
வெளியே சென்று விட்டு வரும்போது, முகத்தில் கஸ்தூரி மஞ்சள் பூசி, குளிர்ந்த நீரில் கழுவினால், தூசி, நுண்ணியிரிகளை அழிந்து, முகம் பொலிவு பெறும்.
இரவு தூங்க செல்லும் முன்பாக தயிருடன் சிறிதளவு ரோஸ்வாட்டரை கலந்து முகத்தில் பூசி, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளிச்சிடும்.
உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.
வாழைப்பழத்தை நன்றாக மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சிடும்.