Tap to Read ➤

தொண்டையில் கட்டும் சளியை போக்க சில எளிய டிப்ஸ்!

சில மூலிகைப் பொருட்கள் மூலம் சளித்தொல்லையில் இருந்து விடுபடலாம்.
HTML Tamil
மழை மற்றும் குளிர் காலங்களில், பலருக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்றவை ஏற்படுவது வழக்கம்.
தொண்டையில் சளி கட்டிக்கொண்டால், எவ்வாறு எளிய முறையில் போக்க முடியும் என்பதை தெரிந்துகொள்வோம்.
ஒரு ஸ்பூன் அதிமதுரப் பொடியை, தேனில் கலந்து சாப்பிட்டால், தொண்டடையில் உள்ள சளி கரைந்துவிடும்.
வெற்றிலையை அரைத்து அதன் சாற்றில் சுண்ணாம்பை குழைத்து தொண்டையில் தடவினால், தொண்டை சளி சரியாகும்.
பசும்பாலுடன் பூண்டு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்து வர தொண்டை சளி கரைந்துவிடும்.
முருங்கை இலை சாறு அல்லது குப்பைமேனி இலை சாற்றுடன் சுண்ணாம்பு குழைத்து தொண்டையில் தடவினால் சளி நீங்கும்.
கற்பூர வல்லி இலையை மென்று விழுங்கினாலும் சளித் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
துளசி இலை அல்லது இஞ்சியை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி கரையும்.
ஒரு கப் சுடுநீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால் சளி குறையும்.
1 டீஸ்பூன் வெந்தயத்தை 250 மில்லி லிட்டர் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குடிக்கலாம்.