Tap to Read ➤

வாயுத் தொல்லையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்!

செரிமான கோளாறால் வாயு பிரச்சனை உண்டாகிறது.
HTML Tamil
கடுமையான வேலைப்பளு, மன அழுத்தம், நேரம் தவறி உண்பது போன்றவை வாய்வுத் தொல்லைக்கான காரணமாகும்.
கார்போஹைட்ரேட் அதிகமுள்ள பீன்ஸ், முட்டைகோஸ், கிழங்கு வகைகளை அதிகம் சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படும்.
வாயு தொல்லை ஏற்பட்டால், வயிற்றில் வலி, வயிறு வீக்கம், நெஞ்செரிச்சல் என பல்வேறு உபாதைகள் உண்டாகும்.
தீராத வாயுத்தொல்லையை, எளிய வீட்டு வைத்தியம் மூலம் எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
பப்பாளிப் பழம், ஜீரண அமிலங்களை முறையாக தூண்டும் தன்மை கொண்டது. இதனை சாப்பிட்டால் வாய்வு பிரச்சனை சரியாகும்.
வாயுத்தொல்லையால் பாதிக்கப்படுவோர், சீரகம், ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை வாயில் போட்டு மென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து, காலையில் குடித்தால், வாயுத்தொல்லை சரியாகும்.
ஜீரண சக்தியை தூண்டும் பேரிக்காயை தினமும் சாப்பிட்டால், வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
புதின இலைகளை வாயில் போட்டு மென்றால் வாயுத் தொல்லை சீராகும். புதினா எண்ணெய்யை வெந்நீரில் ஒரு சொட்டு கலந்து குடிக்கலாம்.
மிளகு பொடியை தண்ணீரில் நன்றாக காய்ச்சி, அதனை வடிகட்டி கால் டம்ளர் அளவு 3 வேளையும் குடித்தால் வாயுத்தொல்லை குணமாகும்.
சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால், வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வாழைப் பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் உண்டாகும்.