Tap to Read ➤

சைனஸ் பிரச்சனையில்  இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்!

பனிக்காலம் வந்தால் சிலருக்கு சைனஸ்  வந்துவிடும்.
HTML Tamil
சைனஸ் நோய் வந்தால், கண்கள், மூக்கு, கன்னங்களில் வலி மற்றும் காய்ச்சல், இருமல், உடல்சோர்வு, மூக்கடைப்பு, தலைவலி ஏற்படும்.
மூக்கடைப்பு மற்றும் சைனஸ் பிரச்சனைகளை வீட்டு வைத்தியம் மூலம்  எப்படி குணப்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
எலுமிச்சை சாற்றுடன், வரமிளகாய் பொடி ஒரு தேக்கரண்டி, 2 ஸ்பூன் தேனையும் வெந்நீரில் கலந்து குடித்தால் சளித்தொல்லை சரியாகும்.
நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்ட இஞ்சியை, வெந்நீரில் கலந்து வடிகட்டி, ஒரு நாளைக்கு 3 கப் இஞ்சி டீ குடிக்கலாம்.
துளசி இலைச் சாற்றுடன் தேன் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், சைனஸ் பிரச்சனை குணமாகும்.
பெருஞ்சீரகப் பொடி, மிளகுத்தூள், பனங்கற்கண்டு ஆகிவற்றை சம அளவு எடுத்து, ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் சைனஸ் குணமாகும்
தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும், இது உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவதோடு, மூக்கு அடைப்பையும் சரி செய்யும்.
சைனஸ் பிரச்சனைக்கு கற்பூரவள்ளிச் சாற்றுடன், கற்கண்டு சேர்த்து 15 மிலி குடித்து வரலாம்.
திப்பிலி பொடியுடன் பனங்கற்கண்டை சம அளவு சேர்த்து, அரை ஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து குடித்தால் சைனஸ் பிரச்சனை சரியாகும்.
வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கசகசாப் பொடியில், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை ஊற்றி, அதில் சில எஸன்ஷியல் எண்ணெய் துளிகளை ஊற்றி, ஆவி பிடித்தால் மூக்கடைப்பு சரியாகும்