Tap to Read ➤

உடல் எடையை வேகமாக குறைக்க சில எளிய டிப்ஸ்!

உணவுக் கட்டுப்பாடு உடல் எடையை குறைக்க உதவும்
HTML Tamil
உண்ணும் உணவில் கவனம் செலுத்தி, வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்தால் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.
உடல் பருமனை குறைக்க விரும்புவோர், தசைகளை வலுப்பெறச் செய்ய தினமும் எளிய உடற்பயிற்சிகள் செய்வது அவசியமாகும்.
இரவு நேரத்தில் அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடவேண்டும்.
உணவுக்கு முன்பும், பசிக்கும் போதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் எடையை குறைக்க இது சிறந்த வழியாகும்.
நீரில் சீரகப் பொடியை கலந்து, அதோடு தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள கொழுப்புகள் கரையும்.
மிதமான சுடுநீரில், எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
கறிவேப்பிலையை பொடியாக செய்து உணவில் கலந்து சாப்பிடலாம். அல்லது கறிவேப்பிலையை ஒதுக்காமல், மென்று சாப்பிடுவது நல்லது.
அமர்ந்து வேலையியில் ஈடுவோர், இடையிடையே எழுந்து, சிறிது நேரம் நடந்து விட்டு மீண்டும் அமர்ந்து பணியை தொடரலாம்.
வெந்தயப் பொடியை காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் கலந்து சாப்பிடலாம். வெந்தயத்தை இரவில் நீரில் ஊறவைத்து, காலையில் சாப்பிடலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புவோர், வாரத்திற்கு ஒருமுறையாவது அசைவ உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.