Tap to Read ➤

வீட்டில் எலி, பல்லி, ஈ வராமல் தடுக்க சில எளிய டிப்ஸ்!

இயற்கையான முறையில் எலி, பல்லி, ஈ, வராமல் தடுக்கலாம்.
HTML Tamil
எலி, கரப்பான் பூச்சி, பல்லி, எறும்பு, கொசு, மூட்டைப்பூச்சி என வீட்டில் வாழும் இதுபோன்ற ஜீவன்களின் தொல்லையால் அவதிப்படுகிறோம்.
இவைகளை விரட்ட நச்சு மருந்துகளை கடையில் வாங்கி பயன்படுத்துகிறோம். இதனை நாமும் சுவாசித்து நோயாளிகளாக மாறுகிறோம்.
எலி, பல்லி, ஈ, கரப்பான் பூச்சிகளை கொல்லாமல், இயற்கையான முறையில் எப்படி விரட்டியடிக்கலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில், மிளகுத் தூளுடன், வெங்காம் மற்றும் பூண்டை அரைத்து நீரில் கலந்து தெளித்து, கரப்பான் பூச்சிகளை விரட்டலாம்.
எலி

புதினா இலைகளை கசக்கி எலி வரும் இடங்களில் போடலாம். அல்லது புதினா எண்ணெய்யை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்து எலியை விரட்டலாம்.
மூட்டைப்பூச்சி

மெத்தை அல்லது கட்டில் உள்ளிட்ட பகுதிகளில் மூட்டைப்பூச்சி இருந்தால், வெங்காய சாற்றை தெளித்து விட்டால் மூட்டைப் பூச்சிகள் காணாமல் போய்விடும்.


துளசி செடியை வீட்டின் ஜன்னல்களில் வைத்து வளர்க்கலாம். லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து, ஈக்கள் வருவதை தடுக்கலாம்
பல்லி

 வீட்டைச் சுற்றி பல்லிகள் ஆக்கிரமித்திருந்தால், வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டை வைத்தால், பல்லிகள் ஓடிவிடும்.
கொசுக்கள்

காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டினால், அதில் வரும் புகையினால் கொசுக்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிடும்.
வண்டுகள்

அரிசி, பருப்புகள், மாவு பொருட்களில் வண்டுகள் வராமல் இருக்க, இரண்டு கொத்து வேப்பிலையை போட்டு வைத்தால் வண்டுகள் வராது.
எறும்புகள்

எறும்புகள் வரும் இடத்தில் எலுமிச்சை சாற்றை பிழியலாம். அல்லது எலுமிச்சை தோலை போட்டு வைத்தால் எறும்புகள் ஓடிவிடும்.