Tap to Read ➤

தொப்பையை குறைக்க சில எளிய டிப்ஸ் !

மிக எளிதாக உருவாகும் தொப்பைக்கான காரணமும், அதை குறைப்பதற்கான வழிமுறைகளும்.!!
HTML Tamil
இளைஞர்கள், வயதானவர்கள் என வயது வித்தியாசமின்றி தொப்பை பொதுவான பிரச்சனையாக உள்ளது.
போதிய உடற்பயிற்சி இல்லாதது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது உள்ளிட்ட பல காரணங்களால் தொப்பை உண்டாகிறது.
தவறான உணவு பழக்கம் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளும் தொப்பையை அதிகரிக்க செய்கின்றன.
திரிபலாவை உட்கொண்டால் தொப்பையில் உள்ள கொழுப்பு குறையும். உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதில் இது பயனுள்ளதாக இருக்கிறது.
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய 3 மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள்தான் திரிபலா சூரணமாகும்.
இஞ்சி சாறோடு, தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு. பின்னர் வெந்நீர் குடித்து வந்தால் தொப்பை கரைந்து விடும்.
தொப்பையில் உள்ள கொழுப்பை நீக்க எலுமிச்சை பெரிதும் பயன்படுகிறது. இது உடலின் நச்சுத்தன்மையை நீக்குவதிலும் பயனுள்ளதாக இருக்கிறது.
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சையை பிழிந்து, அதோடு 3 பல் பூண்டை சேர்த்து ஊறவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் விரைவில் தொப்பை குறையும்.
50 கிராம் கொள்ளு பயிரை, 750 மில்லி தண்ணீரில் இரவே ஊற வைத்து, அதிகாலையில் எழுந்து அதை வேகவைத்து கொள்ளு நீரை குடித்தால் தொப்பை குறைந்து விடும்.