Tap to Read ➤

கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில எளிய டிப்ஸ்!

கால்கள் வீக்கத்திற்கு 'எடீமா' என்று பெயர்.
HTML Tamil
உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தேங்கும் போது கால்களில் வீக்கம் ஏற்படுகிறது
ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்பது, சிறுநீரக பிரச்சனை, அதிகமான மதுப்பழக்கம், உடல் ஆரோக்கிய பிரச்சனைகளால் கால் வீக்கம் ஏற்படுகிறது.
சில வீட்டு வைத்தியம் மூலம் கால்களில் ஏற்படும் வீக்கத்தை எப்படி குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்படும். எனவே, தினமும் 10 கிளாஸ் வரை தண்ணீர் குடித்தால் வீக்கம் குறையும்.
குடிப்பழக்கத்தை உடனே நிறுத்த வேண்டும். மது அருந்தினால், உடலில் நீரை வற்றச் செய்து வீக்கத்தை அதிகரிக்கும்.
வெதுவெதுப்பான நீரில், ஒரு சிட்டிகை கல்லுப்பை கலந்து, கால்களை ஊறவைத்தால், வீக்கம் மற்றும் வலி குறையும்.
உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மற்றும் மிகுதியான திரவங்களை நீக்க எலுமிச்சை ஜூஸை தினமும் குடிக்கலாம்
மக்னீசியம் அதிகமுள்ள கீரை, முந்திரி, பாதாம் மற்றும் அவகேடோ பழம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்
கால் வீக்கத்திற்கு மசாஜ் செய்வது நிவாரணம் அளிக்கும். தேங்கிய திரவத்தை அகலச் செய்து வீக்கத்தையும் குறைக்கும்.
பொட்டாசியம் அதிகம் உள்ள சக்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், கோழிக்கறி ஆகியவற்றை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
உணவில் உப்பு குறைவாக எடுத்துக் கொண்டால் திரவம் தேங்குவதை குறைத்து, வீக்கத்தை குறைக்கலாம்.
உட்காரும் போது அல்லது படுக்கும் போது கால்களை உயர்த்தி வைக்கலாம். சுவற்றில் கால்களை வைத்து சாய்ந்து இருக்கலாம்.