Tap to Read ➤

பச்சிளம் குழந்தையை பராமரிக்க சில எளிய டிப்ஸ்!

பிறந்த குழந்தையைப் பாமரிப்பது  என்பது எளிதான விஷயம் அல்ல.
HTML Tamil
பிறந்த குழந்தையை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கான சில வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் கொடுக்கக் கூடாது.
முதல் 3 மாதங்களுக்கு குழந்தை 18 மணி முதல் 20 மணி நேரம் தூங்கும். தூங்கும் இடத்தில் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
குழந்தை தூங்கும் இடத்தில், ரசாயனக் கொசுவர்த்திகள், லிக்யுட்கள் ஆகியவற்ற பயன்படுத்தால், கொசுவலையை பயன்படுத்துவது நல்லது.
7 மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்கலாம். நன்கு குழைந்த மோர், தயிர் சாதம் கொடுக்கலாம். பருப்பு சாதமும் தரலாம்.
குழந்தையை தினமும் அதிகாலை சூரிய ஒளிக்குளியல் எடுக்க வைப்பது நல்லது. இதனால் குழந்தைக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும்.
முற்றிலும் மூடும் இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு காற்றோட்டமான பருத்தி ஆடைகளே சிறந்ததாகும்.
கைக் குழந்தைகளுக்கு டால்கம் பவுடர்கள், கண்மை வைப்பது ஆகியவற்றை தவிர்த்தால், சரும ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கலாம்
குழந்தையை குளிக்க வைக்கும் முன்பு, தேங்காய் எண்ணெய்யை உடலில் தடவி, பாதுகாப்பான முறையில் மசாஜ் செய்வது நல்லது.
கண், காது, மூக்கு ஆகிய பகுதிகளில் படாமல், குழந்தையின் கை, கால், உடலில் மஞ்சள் தடவியும் குளிக்க வைக்கலாம்.
குழந்தை பிறந்தவுடன் பி.சி.ஜி. தடுப்பூசி போட வேண்டும். மருத்துவரை ஆலோசித்து, உரிய காலத்தில் தேவையான தடுப்பூசிகளை போடவேண்டும்.