Tap to Read ➤

சளித் தொல்லையைத் தடுக்க சில எளிய வழி முறைகள்..!!

சளியை நீக்க உதவும் சிறந்த வழிகள் என்ன...?
Sidhanathan K
நீராவி பிடித்தல் மற்றும் வெந்நீர் பருகுவதன் மூலம் நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளியை வெளியேற்ற முடியும்.
1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் இஞ்சி சாறு கலந்து சாப்பிட்டால் தொண்டை வலி மற்றும் வறட்டு இருமல் நீங்கும். தேன் சளியை வெளியேற்றி இருமலை போக்க உதவுகிறது.
இந்த செயல்முறையை ஒரு நாளைக்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும். தொண்டை வலியால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இஞ்சி உதவுகிறது.
சளியை நீக்க துளசிச்சாறு மற்றும் இஞ்சிச்சாறு சம அளவு கலந்து குடிக்கலாம்.
தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவி வர சளித்தொல்லை நீங்கும்.
மாதுளம்பூ பொடியுடன் பனங்கல்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் காலை, மாலை என இரு வேலை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
சளி இருக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லது. இது தொண்டையில் உள்ள சளியை மெல்லியதாக மாற்ற உதவுகிறது.
புதினா டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளியை வெளியேற்ற உதவுகிறது.