Tap to Read ➤

மன அழுத்தத்தை குறைக்க சில எளிய வழிகள்..!!

மன அமைதிக்கு இந்த செயல்முறை ஒரு நல்ல தீர்வு!
Sidhanathan K
அன்றாடம் அதிகப்படியான அலுவலக வேலைகளில் ஈடுபடும்போது எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம்.
இதுபோன்ற சமயங்களில் அதனை தவிர்க்க ஏதேனும் வேலைகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகும்.
ஒவ்வொரு முறையும் நாம் சத்தமாகச் சிரிக்கும்போது, நமது உறுப்புகளுக்கு அதிக ஆக்ஸிஜன் செல்கிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, தானாகவே மன அழுத்தத்தை குறைக்கிறது.
வீட்டில் செல்லப் பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடும் போது, நமது உடலில் செரோடோனின் மற்றும் ப்ரோலாக்டின் போன்ற நல்ல ஹார்மோன்கள் வெளியாவதோடு, மன அழுத்தமும் குறைகிறது.
வீட்டில் இருக்கும் போது நமக்கு பிடித்த பாடல் அல்லது டிவி நிகழ்ச்சியை பார்க்கலாம்.
பிடித்தமான பாடலை வாய் விட்டு பாடுவதனால் மன மகிழ்ச்சி ஏற்படுவதுடன் மன அழுத்தமும் குறையும்.
மன அழுத்தத்தை குறைக்க மிக முக்கியமான வழி உடற்பயிற்சி. இதன் மூலம் எண்டார்பின்கள் சுரந்து புத்துணர்வை அளிக்கின்றன.
இது தவிர வீட்டில் நமக்கு பிடித்தமான வேலைகளை செய்யலாம். அவ்வாறு செய்யும் போது உடலில் உள்ள கலோரிகள் எரிவதுடன் சோர்வடையாமல் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.
ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதால் மன அழுத்தத்தை கணிசமாகக் குறைத்து உடலைச் சிறப்பாக செயல்பட வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தனது துணையுடன் உடலுறவில் ஈடுபடுவதும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழியாகும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து தன்னம்பிக்கை பிறக்கும்.
இயற்கையான சூழலுக்கு சென்று ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொண்டால் மன அழுத்தம் குறையும். இதனால் ரத்தத்தில் ஆக்சிஜன் கலந்து அமைதி கிடைக்கும்.