சிறுநீரகம் இரத்தத்திலுள்ள யூரியா மற்றும் கிரியேட்டின் அமிலங்கள் போன்ற தேவையற்ற கழிவுகளை நீக்குகிறது.
அதேபோல் இரத்தத்தை வடிகட்டவும், அதிலிருந்து சிறுநீரை பிரித்து வெளியேற்றவும் உதவுகிறது.
சிறுநீரகங்கள் அதிக அளவு புரதத்தை வெளியேற்றுவதால் பெரியோர்பிடல் எடிமா (periorbital edema) எனும் சிறுநீரக நோய் ஏற்படுகிறது.
சோர்வு மற்றும் பலவீனம் இரத்தத்தில் நச்சுகள் மற்றும் அசுத்தங்கள் குவிவதால் சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்பதை குறிக்கிறது.
உணவின் சுவையை உணர முடியாமல் போவது மற்றும் பசியின்மை போன்றவை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குமட்டல் மற்றும் வாந்தியுடன் காலையில் எழுந்திருப்பது இறுதி கட்டத்தை அடைந்துவிட்டதை குறிக்கிறது.
இரத்த சோகை நோய் ஏற்படுவதன் மூலம் கண்டறியலாம்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது, வழக்கத்தை விட குறைவான அளவு சிறுநீர் கழித்தல்.
நுரையுடன் கூடிய சிறுநீர் அல்லது சிறுநீரில் இரத்தக் கசிவு ஏற்படுவது ஆகியவை சிறுநீரகத்தின் வடிகட்டுதல் அமைப்பு சேதமடைந்ததை குறிக்கிறது.
உடலில் நச்சுக்களின் அளவு அதிகரிப்பதால், சருமம் வறண்டு அரிப்பு ஏற்பட்டு வியர்வை நாற்றம் அதிகமாகும்.
முதுகுவலி, அடி வயிறு மற்றும் பாதங்களில் வீக்கம் அல்லது வலி ஏற்படுவது போன்றவை மூலம் கண்டறியலாம்.