Tap to Read ➤

புதிய கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..!!

புதிதாக கணினி வாங்க போகிறீர்களா..?? இதை நினைவில் கொள்க !!
Sidhanathan K
முதலில் வாங்க போவது மடிக்கணினியா (Laptop) அல்லது மேசைக்கணினியா (Desktop) என முடிவு செய்து கொள்ளவும்.
வேறு எங்காவது எடுத்து செல்ல வேண்டிய தேவை இருந்தால் மட்டும் லேப்டாப் வாங்கவும். டெஸ்க்டாப் சற்று விலை குறைவு.
விலை மாறுபாட்டின் காரணமாக என்ன விசயத்திற்காக கணினி தேவை என்பதை யோசித்து தேர்வு செய்யவும்.
எளிமையான சிறு சிறு பணிகளை செய்ய, அவ்வப்போது திரைப்படம் பார்க்க மற்றும் இணையம் உபயோகிக்க மட்டும் என்றால் i3 processor, 8GB RAM கணினியை தேர்வு செய்யலாம்.
மதர்போர்டு மற்றும் ப்ராசசர் எல்லாம் இருக்கும். மானிட்டர் மட்டும் அதன் அளவுக்கேற்ப தனியே வாங்க வேண்டும்.
புரோக்ராம்மிங் (Programming) -க்கு என்றால் i5 processor, 8GB RAM கணினியை தேர்வு செய்யலாம்..
Video editing அல்லது வீடியோ கேம்கள் விளையாட என்றால் i7 processor, 16GB RAM கணினியை தேர்வு செய்யலாம். இதற்கென கூடுதலாக 4GB Graphics card அவசியம்.
Processor எந்த தலைமுறையை (Generation) சேர்ந்தவை என்று பார்த்து வாங்கவும். தற்போதுள்ள ப்ராசசர்கள் 12ம் தலைமுறையை சேர்ந்தவை.
முக்கியமான ஒன்று நாம் தேர்வு செய்யும் ப்ராசசர்களில் இரண்டு விதமான ப்ராசசர்கள் உள்ளன. அவை இன்டெல் (Intel), ஏஎம்டி (AMD) Ryzen.
இன்டெல் ப்ராசசர்கள் முறையே i3, i5, i7, i9. சில யூடியூப் ஸ்ட்ரீமெர்கள் AMD Ryzen வகையை தேர்வு செய்வார்கள். இன்டெல்லை விட AMD ப்ராசசர்கள் சற்று விலை அதிகம்.
Dell, HP, Lenovo போன்ற நிறுவனங்களின் கணினி வாங்கும்போது Windows Home edition ஆப்பரேட்டிங் சிஸ்டம் (OS) இலவசமாகவே கிடைக்கும்.
மேலே கூறிய பயன்பாடுகளில் ஸ்டோரேஜுக்காக 240GB அல்லது 512GB அளவுடைய SSD வாங்கவும். SSD கணினிகள் மிக விரைவாக load ஆகும். இதன் விலை அதிகம் என்பதால் 1TB அளவுடைய HDD வாங்கலாம்.
மானிட்டர் குறைந்தபட்சம் 18 இன்ச் அல்லது 24 இன்ச் வாங்கலாம். Full HD (1920*1080) resolution ஆக பார்த்து கொள்ளவும்.