Tap to Read ➤

வெடிப்பு இல்லாத அழகான பாதங்களுக்கு சில டிப்ஸ்!!

கிருமிகளிடமிருந்து கால் பாதங்களை காக்க சில மருத்துவ குறிப்புகள்..!!
Sidhanathan K
முகத்தை பராமரிக்க நாம் செலவிடும் நேரத்தில், பாதங்களை பராமரிப்பதில் சில நிமிடங்கள் கூட செலவிடுவதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நம் பாதத்தின் அழகும் முக்கியம்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களை கவனித்துக்கொள்வது அவசியம். எனவே நம் பாதங்களை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி பாதங்களை சுத்தம் செய்து கிருமிகளை அழிக்கிறது.
தினமும் இரவில் படுக்கும் முன், ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் ஷாம்பு போட்டு கால்களை 5 முதல் 10 நிமிடம் ஊறவைத்து பின் பிரஷ் மூலம் சுத்தம் செய்யவும்.
இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்யலாம். பின் ஒரு மெல்லிய டவலால் பாதங்களை ஈரமாகத் துடைத்து, நல்லெண்ணெயை சிறிது சூடாக்கி பாதங்களில் தடவவும்.
மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் பாதத்தில் வெடிப்பு நீங்கும்.
உருளைக்கிழங்கை உலர்த்தி மாவு போல் அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதங்கள் பளபளக்கும்.
பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
அடிக்கடி பாதத்தை உயர்த்துவது, நிற்பது, கால்களை நீட்டுவது, நடைபயிற்சி மற்றும் பிற வகையான உடற்பயிற்சிகள் நம் பாதங்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
மேலும், பாதத்துக்கு மசாஜ் செய்தல் மற்றும் மெல்லிய சூட்டில் பாதத்தை கழுவுதல் ஆகியவை பாதத்துக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக் கொள்ளலாம்.