Sidhanathan K       Mar 02, 2023

மேற்கத்திய கழிப்பறையை சரியாக பயன்படுத்த சில டிப்ஸ்..!!

நவீன யுகத்திற்கு ஏற்ப, வீடுகளில் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது இந்திய கழிப்பறையிலிருந்து சற்று வித்தியாசமானது. வீட்டில் பெரியவர்களுக்கு மிகவும் வசதியாக கருதப்படுகிறது.

வெஸ்டர்ன் டாய்லெட் வைத்திருக்கும் அனைவருக்கும் அதை சரியாக பயன்படுத்த தெரியுமா என்பதுதான் கேள்வி.

பொது இடங்களில் அல்லது கார்ப்பரேட் சூழல்களில் மேற்கத்திய கழிப்பறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

பொதுவாக வெஸ்டர்ன் டாய்லெட் வைத்திருப்பவர்கள் டாய்லெட் அருகில் குப்பைத்தொட்டி, டிஸ்யூ பேப்பர் அல்லது பேப்பர் ரோல் வைத்திருப்பது நல்லது.

கழிப்பறை இருக்கையின் ஈரப்பதத்தை துடைக்க அல்லது கறைகளை சுத்தம் செய்ய, கைகளை துடைத்துக்கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிறுநீர் மட்டும் கழிப்பவர்கள் மூடிக்கு அடுத்துள்ள வளையத்தை தூக்கிவிட்ட பிறகே சிறுநீர் கழிக்க வேண்டும். ஏனெனில் வளையத்தின் மேல் சிறுநீர் சிதற வாய்ப்பு உள்ளது.

கழிப்பறை இருக்கை வளையத்தில் அமர்ந்து மலம் கழிப்பதற்கு முன், இருக்கையை சுற்றி துடைப்பது நல்லது. மேலும் ஒரு முறை ஃப்ளஷ் செய்வதும் நல்லது. இதன் மூலம் சிறுநீர் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.

கழிப்பறை இருக்கையை மூடிவிட்டு ஃப்ளஷ் செய்வது நல்லது. கழிவறையில் உள்ள அனைத்து கிருமிகளும் ஆறு மீட்டர் வரை மேலெழும்பி சுற்றியுள்ள பொருள்கள் மீது பட்டு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்.

மலம் கழித்த பிறகு ஹேண்ட் ஷவரைக் கொண்டு கழுவிவிட்டு, டிஷ்யூ பேப்பரால் துடைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் நோய் கிருமிகள் பரவுதல் தடுக்கப்படுகிறது.

வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், முடக்குவாதம், மூட்டு வலி இருப்பவர்கள் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories