Tap to Read ➤

சரியான முறையில் நடைப்பயிற்சி செய்ய சில டிப்ஸ்... !

நடைப்பயிற்சியை  செய்வதற்கான வழிமுறைகளை  இப்போது பார்ப்போம்.
HTML Tamil
உடல் பருமனை குறைக்க பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நடைப்பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
நடைப்பயிற்சி தொடங்குவதற்கு முன்பாக, 'வார்ம் அப்' செய்து, நமது உடலை தயார் செய்துகொண்டு பின்னர் நடைப்பயிற்சியை தொடங்கலாம்.
இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு இந்தப் பயிற்சி நமக்கு உதவியாக இருக்கிறது.
நடைப் பயிற்சி செல்லும் சாலை, மேடு, பள்ளமின்றி சீராக இருப்பதை உறுதி செய்து கொள்ளவது மிகவும் நல்லது.
இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னர் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
மூட்டு மற்றும் இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், நடைப்பயிற்சி செய்வது குறித்து, மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
நடைப்பயிற்சி செய்பவர்கள் தங்களது காலணி மற்றும் உடைகளை இறுக்கமாக அணியாமல் இருக்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவது மிகவும் நல்லது.
நடைப் பயிற்சியின்போது கைகளை முன்னும் பின்னுமாக அசைத்தும், விறுவிறுப்பாகவும் நடந்துச் சென்றால் உடலுக்கு நற்பயன்களை தரும்.
நடைப்பயிற்சி செய்பவர்கள் ஒரு மணி நேரமாவது நடந்து செல்ல வேண்டும். ஆரோக்கியமாக இருப்பவர்கள் 45 நிமிடங்கள் வரை நடந்து செல்லலாம்.
செல்ஃபோனில் பேசிக்கொண்டே நடைப்பயிற்சி மேற்கொண்டால் பலன் கிடைக்காது. மேலும், இதனால் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
தொடர்ந்து நடைப் பயிற்சி மேற்கொண்டால், உடல் பருமன், கொழுப்புச் சத்து கோளாறு, தூக்கமின்மை, மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டால், சுகப்பிரசவம் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டாகும்.