Tap to Read ➤

பட்டுப்புடவைகளை பாதுகாப்பாக பராமரிக்க சில டிப்ஸ்..!!

பட்டு நம் பாரம்பரியத்தின் குறியீடு!!
Sidhanathan K
பட்டுப் புடவைகளில் இருக்கும் மூலப்பொருட்களைப் பொறுத்து, அவை பியூர் சில்க் மற்றும் மிக்ஸ்டு சில்க் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
அதேபோல அவை நெய்யும் முறையைப் பொறுத்து கைத்தறி, விசைத்தறி என இரண்டு வகைகள் உள்ளன.
தூய பட்டு (Pure Silk) என்பது தூய பட்டு இழைகளால் மட்டுமே தயாரிக்கப்படும் பட்டு. காலங்கள் மாறினாலும் அதன் பொலிவு அப்படியே இருக்கும் என்பதால் விலையும் அதிகம்.
மிக்ஸ்டு சில்க் ரகங்களை மூலப்பொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவே நெய்கிறார்கள். அதனால் தூய பட்டைவிட இதன் விலையும் பொலிவும் சற்று குறைவாகவே இருக்கும்.
கைநெசவு புடவைகள் அதிக கனமாகவும், நீடித்து உழைக்கக்கூடியதாகவும் இருக்கும்.
பட்டுப் புடவை மற்றும் வேஷ்டி ஆகியவற்றின் சரிகைகளை பியூர் சரிகை, செம்பு சரிகை என்று பொதுவாக அழைக்கின்றனர்.
பியூர் சரிகை என்பது தங்க முலாம் பூசப்பட்ட/வெண்மையான தூய வெள்ளி சரிகை. ஒரு பழைய பட்டுப் புடவை கூட அதில் உள்ள சுத்தமான வெள்ளி ஜரிகைக்காக தான் தேடித் தேடி வாங்கப்படுகிறது.
பட்டுச் சேலைகளை நீரில் துவைக்கக் கூடாது, டிரை வாஷ் மட்டுமே செய்ய வேண்டும்.
கட்டியிருந்த சேலையை கழற்றிய உடனே மடித்து வைக்கக் கூடாது. அப்படி செய்தால் வியர்வை பட்டு புடவையை சீக்கிரம் பழையதாக்கி விடும்.
கட்டியிருந்த சேலையை கொஞ்ச நேரம் காற்றில் உலர வைத்த பின்பு தான் மடித்து வைக்க வேண்டும்.
சற்று குளிர்ந்த, ஆனால் ஈரப்பதம் இல்லாத இடத்தில் சேமிப்பது அதன் பளபளப்பை உறுதி செய்யும்.
பட்டுப் புடவைகளை பொதுவாக மர பீரோவில் வைப்பது தான் சிறந்தது.
இரும்பு பீரோவில் பட்டு புடவைகளை வைக்க நேர்ந்தால் அடிக்கடி காற்று படுமாறு வைக்க வேண்டும்.