Tap to Read ➤

செல்போன் பேட்டரி சார்ஜ் தீராமல் அதிக நேரம் நீடிக்க சில டிப்ஸ்!!

மொபைல்ல சார்ஜ் நிக்கலையா ?? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!
Sidhanathan K
போன் வைப்ரேட் மோடில் இருந்தால் பேட்டரி சார்ஜ் விரைவில் குறையும். எனவே வைப்ரேட் மோடை முடிந்தவரை கட் செய்வது நல்லது.
மொபைல் போனில் உள்ள ஏரோபிளேன் மோட் ஆப்ஷன், வீடியோக்கள் போன்ற மல்டிமீடியா பயன்பாடுகளுக்கு அதிக பேட்டரி ஆயுளை வழங்குகிறது.
ஸ்மார்ட்போன் ஆன்டெனா அதிக பேட்டரியை செலவழிக்கும் என்பதால் நெட்வொர்க் இல்லாத இடங்களில் பயணம் செய்யும் போது மொபைலை ஏரோபிளேன் மோடுக்கு மாற்றுவது நல்லது.
தேவையற்ற நேரங்களில் ஜி.பி.எஸ்., புளூடூத் போன்றவற்றை ஆப் செய்வது பேட்டரியின் ஆயுளை கூட்டுகிறது.
அதேபோல மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தும்போது, வைஃபை இணைப்பைத் துண்டிப்பது நல்லது.
பேட்டரி திறன் வீணாவதை தடுக்க லோ பவர் மோட் என்னும் முறையை ஆக்டிவேட் செய்யவும்.
மொபைல் போனின் அதிக ப்ரைட்னஸ் பேட்டரி ஆயுளைக் குறைக்கிறது. இதைத் தடுக்க ஆட்டோ-ப்ரைட்னஸ்-ஐ ஆன் செய்யவும்.
மொபைலை சாப்ட்வேர் மற்றும் OS அப்டேட்டுகளில் வைத்திருப்பது நல்லது. சில அப்டேட்டுகள் மூலம் அப்ளிகேஷன்கள் வேகமாகவும் மென்மையாகவும் இயங்க உதவுகின்றன.
பேட்டரி முழுவதுமாக தீர்ந்துவிட்டால் போனை ஏரோபிளேன் மோடில் வைக்கவும். இது மொபைல் போனில் உள்ள அனைத்து வயர்லெஸ் அம்சங்களையும் முடக்கும்.
ஏரோபிளேன் மோடில் வைத்தால் நம்மால் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.