Tap to Read ➤

காட்டன் ஆடைகளை பாதுகாக்க/பராமரிக்க சில டிப்ஸ் ..!!

காட்டன் வகைகள் என்னென்ன ?
Sidhanathan K
காட்டன் ஆடைகளில் பியூர் காட்டன், மிக்ஸ்டு காட்டன், பாலி காட்டன் என மூன்று வகைகள் உள்ளன.
நூறு சதவிகிதம் தூய பருத்தி நூலினால் செய்யப்படுபவைதான் 'பியூர் காட்டன்'.
காட்டனோடு பலவிதமான செயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கப்படுபவை 'மிக்ஸ்டு காட்டன்'.
பாலியஸ்டர் மற்றும் பருத்தி கலந்த கலவையான நூலினால் உண்டாக்கப்படுபவை 'பாலி காட்டன்'.
பொதுவாக கனமான தூய பருத்தி (Pure Cotton) அணிவது சிறந்தது. ஆனால் அதை பராமரிப்பது சற்று கடினம்.
முடிந்தவரை காட்டன் துணிகளை வாஷிங் மெஷினில் துவைப்பதை தவிர்த்து கைகளால் துவைத்தால் துணியின் அழகு குறையாமல் நீடிக்கும்.
காட்டன் துணிகளை துவைத்த பின் நேரடியாக வெயிலில் உலர்த்தினால் பொலிவிழந்து போய் விடும். எனவே காற்றோட்டமான இடத்தில் உலர்த்தினாலே போதுமானது.
தோற்றத்தை மிடுக்காக காட்ட காட்டன் ஆடைகளை அயர்ன் செய்து அணிவதே சிறந்தது.
துவைத்து உலர்த்திய காட்டன் துணிகளில் இருக்கும் மடிப்புகளை நீக்க அயர்ன் செய்யும்போது அந்த இடங்களில் நீர் தெளித்தால் மடிப்பு நீங்கிவிடும்.
கஞ்சி போட்டு அயர்ன் செய்த காட்டன் ஆடையை பல நாட்கள் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தால் வண்டு மற்றும் பூச்சிகள் அரிப்பதற்கு காரணமாகிவிடும்.