Tap to Read ➤

பளிச்சிடும் பற்களை பாதுகாக்க சில டிப்ஸ் !!

பற்களை பாதுகாக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
Sidhanathan K
பல் வரிசை அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள் உண்டாகும்.
கரும்பு மற்றும் அன்னாசிப்பழம் பற்களை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவது பற்களுக்கு ஆரோக்கியமானது.
காலை, இரவு என இரு வேலைகளும் பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு உணவிற்கும் பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும்.
அதிக காரமில்லாத டூத்பேஸ்ட்டோ, பவுடரோ நல்லது. நுரை அதிகம் வரும் டூத்பேஸ்ட் தவிர்க்கப்பட வேண்டும்.
ஒருமுறையாவது விரலால் பல் துலக்க வேண்டும்.
கரி, உப்பு, செங்கல் தூள் போன்ற கடினமான பொருட்களைக் கொண்டு அடிக்கடி பல் துலக்குவதை தவிர்க்க வேண்டும்.
மிகவும் சூடான மற்றும் குளிர்ந்த உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்கவேண்டும் .
முடிந்தவரை இனிப்பு, சாக்லேட் போன்றவற்றைக் கடிக்காமல் சாப்பிடுவது நல்லது.
புகையிலை, சிகரெட், குட்கா, பான்பராக் போன்ற கறை மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் தவிர்க்க வேண்டும்.
மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாவது பல் மருத்துவர்களிடம் சென்று சுத்தம் செய்து கறைகளை அகற்ற வேண்டும்.
90 நாட்களுக்கு ஒருமுறை டூத்பிரஷை மாற்றுவது நல்லது.
பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக பளபளக்கும்.
பற்களை வெண்மையாக்க எலுமிச்சை துண்டுகளை உப்பு சேர்த்து தேய்க்க வேண்டும்.
ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக பழங்களை கடித்து சாப்பிடலாம்.