Tap to Read ➤

ஆன்லைன் வங்கி மோசடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்!!

பணத்தை பாதுகாக்க உண்டான வழிகள் !!
Sidhanathan K
டிஜிட்டல் இந்தியா திட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து அனைத்து சேவைகளும் ஆன்லைன் என்றாகிவிட்டது.
கொரோனா காலத்தில் பலர் UPI பரிவர்த்தனைகளை செய்யப் பழகிவிட்டனர். மேலும் நேரம் அதிகம் வீணாகாமல் இருப்பதால் UPI பரிவர்த்தனைகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) வெளியிட்டுள்ள தகவலின்படி, செப்டம்பர் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.6.78 பில்லியனாக அதிகரித்துள்ளது.
இது தவிர, கடந்த 2021-22 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 13,951 ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. 76.49 கோடி வரை நிதி திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் ஆன்லைனில் மேற்கொள்ளும் ட்ரான்ஸாக்ஷன் அனைத்தையும் சரியான முறையில் ட்ராக் செய்து வந்தாலே பண மோசடியிலிருந்து தப்பித்து விடலாம்.
ஒருவரிடமிருந்து பணத்தை பெற வேண்டும் என்றால், அதற்கு UPI பின் தேவை இல்லை என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
UPI மூலமாக பணம் அனுப்புவதற்கு முன், சரியான நபருக்கு தான் அனுப்புகிறோமா என்பதை சரி பார்த்து கொள்ள வேண்டும்.
UPI பின் நம்பரை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மேலும் UPI பின்னை அடிக்கடி மாற்ற வேண்டும்.
தன்னிச்சையான மற்றும் அறியப்படாத Collect Request வந்தால் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
QR குறியீடு மூலம் பணம் செலுத்தும் போது, பணம் பெறுபவர் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து, பின்னர் பணம் செலுத்த வேண்டும்.
தினசரி UPI பரிவர்த்தனைகளுக்கென வரம்பை (Limit) அமைப்பது நல்லது. அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டாலும், மோசடி செய்பவர்கள் கணக்கில் இருந்து அனைத்து பணத்தையும் எடுக்க முடியாது.