Tap to Read ➤

சில பயன்தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள்...!

வீட்டு வைத்தியம்..!!
Sidhanathan K
1. கண் நோய்கள்

நூறு மில்லி பசும்பாலை அதே அளவு தண்ணீரில் விட்டு, அதனுடன் வெண்தாமரை மலர்களைச் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆவி பிடித்தால் கண் நோய்கள் குணமாகும்.
2. மலச்சிக்கல்

நீரில் ஒரு கைப்பிடி சுக்கு தட்டி போட்டு தினமும் காய்ச்சி குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மருத்துவ குணம் கொண்ட சுக்கு ஜீரணத்துக்கு உதவும் மற்றும் வாயுவை அகற்றும்.
3. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
4. நினைவாற்றல்

வல்லாரை கீரையை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
5. சீதபேதி

ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க சீதபேதி குணமாகும்.
6. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? 4 சிட்டிகை வேப்பம்பூவை எடுத்து தூள் செய்து இஞ்சி சாறுடன் கலந்து சாப்பிட குணமாகும்.
7. பூச்சிக்கடி

எறும்பு, கொசு போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கலாம்.
8. வயிற்றுப்புண்

பீட்ரூட் சாற்றில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.
9. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் ஒரு டீஸ்பூன் சீரகத்துடன் சேர்த்து மை போல் அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்து விட்டால் வயிற்றுப்போக்கு நிநின்றுவிடும்.
10. வேனல் கட்டி

சிறிது சுண்ணாம்பும் அதனுடன் தேன் அல்லது வெல்லம் சேர்த்து குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவை வரும். அந்த பசையை கட்டியின் மீது வைத்து அதன் மேல் வெற்றிலையை ஒட்ட கட்டி கரைந்து விடும்.