Varalakshmi N       Feb 22, 2026

ருசியசான சமையலுக்கு சில பயனுள்ள டிப்ஸ்..!

தினசரி சமையலில் சிறிய மாற்றங்களே பெரிய சுவையும் மணத்தையும் தருகின்றன. சில பயனுள்ள டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்

கீரை வகைகள் சமைக்கும் போது, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்தால் கீரையின் முழு சத்தும், சுவையும்  கிடைக்கும்

பொன்னாங்கண்ணி கீரையை சிறிது வெண்ணெய் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும், மேலும் கண் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவும்

பசலைக்கீரையை, தண்டை நீக்கி, பொடியாக நறுக்கி சீராக பொடி, மிளகு உப்பு ஆகியவற்றை கோதுமை மாவுடன் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால் சத்தும் சுவையும் நிறைந்த உணவாக இருக்கும்

முட்டைக்கோஸ் சமைக்கும்போது கடுக்கிற்கு பதிலாக சீரகம் போட்டு     தாளித்தால் சுவையும் மணமும் அதிகரிக்கும்

எலுமிச்சை சாதம் செய்யும்போது மஞ்சள் பொடியை எலுமிச்சை சாறுடன் கலந்து செய்தால் சாதத்திற்கு இயல்பான மணமும் நிறமும் கிடைக்கும்

இந்த எளிய டிப்ஸ்களை பயன்படுத்தி சமையலை சுவைமிகு மற்றும் சத்தானதாக மாற்றுங்கள்