சென்னையை அடுத்துள்ள கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது
இந்த நூலகம் தான் ஆசியாவிலே மிக பெரிய பரப்பளவிலும், சுமார் 8 தளங்களைக் கொண்டுள்ளது
அறிஞ்சர் அண்ணாவின் நூற்றண்டை நினைவுபடுத்தும் விதமாக, அண்ணா நூற்றாண்டு நூலகம் என பெயரிடப்பட்டது
பல லட்சம் புத்தகங்களை கொண்டுள்ள இந்நூலகம் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
அன்னைவை பெருமைப்படுத்தும் விதமாக நூலகத்தின் நுழைவுவாயிலில் அவருடைய சிலை நிறுவப்பட்டு சில பொன்மொழி பொறிக்கப்பட்டுள்ளது
சிறப்புப்பிரிவாக பார்வையற்றோருக்கான பிரைய்லி புத்தகங்களும், குறுந்தகடுகளும் உள்ளன
கல்வி, கலை,அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு,மருத்துவம், பொழுதுபோக்கு சம்பந்தமான பருவ இதழ்களும் இடம்பெற்றுள்ளது
குழந்தைகளுக்கான பிரிவில் கணினி வழியாக நீதிக்கதைகள், விளையாட்டுகளை விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது
அறிவை வளர்க்கக்கூடிய இந்த அமைதி பூங்காவில் பல விஷயங்களை அறிந்துகொள்ளலாம்